அன்று செல்வாவின் சகோதரர் புதிதாக செல்போன் ஒன்று வாங்கி வந்திருந்தார்.அதுதான் அவர்கள் வீட்டில் வாங்கப்பட்ட முதல் செல்போன்.
அதனால் செல்வாவிற்கு செல்போன் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை.
உறவினர்கள், நண்பர்கள் இப்படி எல்லோருக்கும் அழைத்து செல்போன் வாங்கியிருப்பதையும் அதன் எண்களையும் கொடுத்தபடி இருந்தார் அவரது சகோதரர்.
எல்லோருக்கும் அழைத்து முடித்த பிறகு செல்வாவிடம் அதில் எப்படி எண்களைப் பதிவது என்பதை விளக்கிக்கொண்டிருந்தார்.
“ சரி, ராங் நம்பர்னா என்ன ?” என்று தனது சந்தேகத்தைக் கேட்டார் செல்வா.
“ அது நமக்குத் தெரியாத புது நம்பர்ல இருந்து வரும்! “
“ ஆனா எனக்குத்தான் 0 லிருந்து 9 வரைக்கும் எல்லா நம்பரும் தெரியுமே, அப்புறம் எப்படி புது நம்பர்?!” என்று வியந்தார் செல்வா.
“ ஐயோ! புது நம்பர்னா வேற யாருக்கோ கால் பண்ண நினைச்சு நமக்கு பண்ணுறதுதான் ராங் நம்பர்” விளக்கினார் சகோதரர்.
மாலை அலுவலகத்திலிருந்து திரும்பிய செல்வாவின் சகோதரர் தனது நண்பருக்கு அழைக்கலாம் என்று செல்போனை எடுத்தார். பேலன்ஸ் சுத்தமாகத் தீர்ந்திருந்தது.
“ அட கொடுமையே, 500 ரூபாய்க்கு ரீ சார்ச் பண்ணிருந்தேன், அவ்ளோ எப்படி ஒரே நாள்ல தீர்ந்துபோச்சு, என்ன பண்ணின?” என்று செல்வாவைப் பார்த்துக்கேட்டார்.
” ராங் நம்பர்ல இருந்து கால் பண்ணுறவங்களுக்கு நம்ம நம்பர் தெரியாதுல, அதான் எல்லா ராங் நம்பருக்கும் கூப்பிட்டு நாம செல்போன் வாங்கிட்டோம்னு சொன்னேன்!” என்றார்.
17 comments:
okok
பழைய காலத்து செல் போனா இருந்தா அப்டியே தூக்கி தலைல போட இருந்தது...
ராங் நம்பருக்கு சொன்னியே ரைட் நம்பருக்கு சொன்னியா?
@!#$@!$#@@#!^@#
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
okok
/
not ok...
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.
// Mohamed Faaique said...
பழைய காலத்து செல் போனா இருந்தா அப்டியே தூக்கி தலைல போட இருந்தது..//
ஏன் தலைல போடனும் ? அது என்ன ஹெல்மெட்டுங்களா ?
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ராங் நம்பருக்கு சொன்னியே ரைட் நம்பருக்கு சொன்னியா?
//
அதான் எங்க அண்ணன் கூப்பிட்டு சொல்லிட்டாரே ?
// siva said...
@!#$@!$#@@#!^@#
//
@#$%^*^
/// சத்யா said...
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.//
ஹி ஹி.. நன்றிங்க :)
நீ கால் பண்ணி பேசியிருந்தா அது ரைட் நம்பர்தானே
சாரிங்க...
ராங்க நம்பர்...
தெரியாம வந்துட்டேன்...
கொடுமை,கொடுமை...,
இனிமே இது மாதிரி கதை படிப்பியா படிப்பியா படிப்பியா? (வடிவேல் வெற்றி கொடிகட்டு ஸ்டைல்)
நல்லா இருந்திச்சு கதை
good
ஹாஹா செல்வா எபெக்ட் கதை நல்லா இருக்கு
Post a Comment