Wednesday, August 10, 2011

வீட்டுல சொல்லிட்டு வந்திட்டியா?


இது செல்வாவின் குழந்தைப் பருவத்தில் நடந்தது.

3 அல்லது 4 வயது இருக்கும் போது செல்வா மிதிவண்டி பழகிக்கொண்டிருந்தார். சாலையோரமாக மிதிவண்டியை ஓட்டியவாறு வந்தவர் எதிரில் வந்துகொண்டிருந்தவரின் மீது லேசாக மோதிவிட்டார்.

” ஏய், பாத்துபோ! “ என்றார் எதிரில் வந்தவர்.

“ உன்ன எதுக்கு நான் பாத்துட்டுப் போகனும், நீ என்ன மாமனா ? மச்சானா? மானங்கெட்டவனே!” ( அப்பொழுதுதான் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் பார்த்திருந்தார்) என்றார் செல்வா.

” வீட்டுல சொல்லிட்டு வந்திட்டியா? “ என்று கோபமாகக் கேட்டார் அந்த வாலிபர்.

“ நான் எதுக்கு உங்க வீட்டுல வந்து சொல்லனும், நீ மட்டும் எங்க வீட்டுல வந்து சொன்னியா? “ என்று வழக்கம்போலவே லூசுத்தனமாகக் கேட்டார் செல்வா.

இனியும் இங்கே நிற்பது மரியாதையல்ல என்று அந்த வாலிபர் அங்கிருந்து எதுவும் சொல்லாமலே கிளம்பிவிட்டார்.

அப்பொழுது சாலையில் இருவர் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட செல்வா அவசர அவசரமாக தனது மிதிவண்டியைக் கையில் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் ஓடினார்.

வீட்டிற்குள் வந்ததும் ஒரு பெரிய கருப்புத்துணியை எடுத்துக் கண்ணை முழுவதும் மறைத்துக் கட்டிக்கொண்டார்.

கண்ணை மறைத்துக் கட்டிக்கொண்டதால் எதிரில் என்ன வருகிறது என்று கூடத் தெரியாமல் அங்கும் இங்குமாக அலைந்துகொண்டிருந்தார்.

இதைப் பார்த்த அவரது சகோதரர் “ என்னடா இது? எதுக்கு இப்படி கண்ணக் கட்டிட்டு திறியுற? “ என்றார்.

“ இன்னிக்கு நாலாம் பிறை வரப்போகுதாம்ல, அதப் பார்த்தா நாய் படாத பாடு படனும்னு ரோட்டுல பேசிட்டிருந்தாங்க. அதான் அத பாக்கக் கூடாதுனு இப்படி கட்டிருக்கேன். நீயும் கட்டிக்க! “

” நாலாம் பிறையப் பார்த்தா நாய் படாத பாடு படனும்னு சொல்றதே ஒரு முட நம்பிக்கை,அத பாக்காம இருக்கவே இப்படி நாய் படாத பாடு படுறவங்கள என்ன பண்ணுறது? “ என்று அதட்டினார் அவரது சகோதரர்.

(சத்தியமா இது கற்பனைக் கதைங்க! உண்மை நிகழ்ச்சி அல்ல)

16 comments:

TERROR-PANDIYAN(VAS) said...

//சத்தியமா இது கற்பனைக் கதைங்க! உண்மை நிகழ்ச்சி அல்ல //

நான் நம்ப மாட்டேன்...

எஸ்.கே said...

நாலு வயசிலேயே சொல்வளம் இவ்வளவு வளர்ந்துடுச்சா?:-)

Madhavan Srinivasagopalan said...

// 3 அல்லது 4 வயது இருக்கும் //

எத்தனையாவது.. ?


மூணா.. நாலா.. சரியாச் சொல்லப்பா.. மூன்றரை ஓகேவா ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Ok. Next?

NaSo said...

:))

செல்வா said...

//நான் நம்ப மாட்டேன்..//

நம்பித்தான் ஆகனும்...

செல்வா said...

// எஸ்.கே said...
நாலு வயசிலேயே சொல்வளம் இவ்வளவு வளர்ந்துடுச்சா?:-)
//

நீங்க வேற.. இதுக்குப் பேரு சொல்வளமா ?

செல்வா said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Ok. Next?
/

இதால என்னாகும் ?

செல்வா said...

//
மூணா.. நாலா.. சரியாச் சொல்லப்பா.. மூன்றரை ஓகேவா ?//

சரினா, 3.5 வச்சிக்கலாம்..

Renu said...

grrrrrrrrrrr

வைகை said...

சாலையோரமாக மிதிவண்டியை ஓட்டியவாறு வந்தவர் //


மிதி வண்டிய மிதிக்காம ஏன் ஓட்டிகிட்டு வந்த?

வைகை said...

நாய் படாத பாடு படனும்னு சொல்றதே ஒரு முட நம்பிக்கை,//

ஒருவேள.. உன்னைய பார்த்திட்டு நாய் படர பாட்ட பார்த்திட்டு சொல்லிருப்பாங்களோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// உன்ன எதுக்கு நான் பாத்துட்டுப் போகனும், நீ என்ன மாமனா ? மச்சானா? மானங்கெட்டவனே!” ( அப்பொழுதுதான் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் பார்த்திருந்தார்) என்றார் செல்வா.///////

நல்லவேள வேற தாதா படம் எதுவும் பாக்கல.....

Unknown said...

nanum namba maaten...

Mohamed Faaique said...

///3 அல்லது 4 வயது இருக்கும் போது////
///அப்பொழுதுதான் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் பார்த்திருந்தார்///

அது உங்க 40 வயசு`ல ரிலீஸ் ஆன படமாச்சே!!!

R.Santhosh said...

//நான் எதுக்கு உங்க வீட்டுல வந்து சொல்லனும், நீ மட்டும் எங்க வீட்டுல வந்து சொன்னியா?// அடடாடாடா என்ன ஒரு அறிவுப்பூர்வமான கேள்வி
அவன மட்டுமே வச்சு இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்