செல்வாவும் அவரது நண்பரும் ஒரே ஊரில் வேறு வேறு நிறுவனங்களில் பணிபுரிந்துகொண்டிருந்தனர்.
இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்ததால் இவர்களே சமையல் செய்து சாப்பிட்டு வந்தனர்.
ஒருநாள் செல்வா சமையலை முடித்துவிட்டு அவரது நண்பரை சாப்பிட அழைத்தார். செல்வா வைத்திருந்த குழம்பு நுரைதள்ளி வெண்மையாகக் காட்சியளித்தது.
" டேய் , என்னடா இது ? இப்படி பொங்கிப்போய் கிடக்குது!" என்றார் நண்பர்.
" அது உப்பு தீர்ந்து போச்சா , அதான் டூத் பேஸ்ட்ட எடுத்து போட்டுட்டேன்! " என்றார் செல்வா.
" டூத் பேஸ்ட்ட எதுக்கு எடுத்த அதுக்குள்ளே போட்ட ? "
" நீதான சொன்ன , அதுல உப்பு இருக்குனு ! " என்றார் செல்வா சிரித்தவாறே.
" அடேய், அது பல்லு விளக்கறதுக்கு பயன்படுத்துறது ! ஏண்டா உயிரை எடுக்குறீங்க ? விளம்பரத்துலதான் இது போட்டு பல்லு விளக்கலைனா பல்லு போய்டும்னு சொல்லுறாங்க , நீ அத விட ! கொடுமைடா! " என்று அலுத்துக்கொண்டே குழம்பினை எடுத்து குப்பையில் கொட்டிவிட்டு வெளியில் சென்று சாப்பிட்டுகொள்வதாகக் கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார்.
செல்வாவிற்கு ஒன்றும் புரியவில்லை. டூத்பேஸ்ட்டில் உப்பு இருக்கு என்று விளம்பரத்தைப் பார்த்துதானே அப்படிசெய்தோம் என்று குழம்பிப்போனார்.
மாலையில் வீடுதிரும்பிய செல்வாவின் நண்பர் செல்வா சோகமாக அமர்ந்திருப்பதைக் கண்டார்.
" ஏன்டா ? என்னாச்சு ? மறுபடியும் டூத்பேஸ்ட்ல எதாச்சும் பண்ணி வச்சிருக்கியா ? " என்றார் நக்கலாக.
" அதெல்லாம் இல்ல , உங்க மேனஜர் செய்யுற வேலைகள்ல பாதி நீ செஞ்சு தரதால உன்ன சீக்கிரமா ப்ரோமோசன் பண்ணினார்னு சொன்னீல , அதே மாதிரி நானும் எங்க ஓனர் கிட்ட அவரோட வேலை எதாச்சும் நான் பண்ணுறேன்னு கேட்டேன் , அதுக்கு திட்டி அனுப்பிட்டாங்க! " என்றார் சோகமாக.
" திட்டுற அளவுக்கு அப்படி என்ன கேட்ட ? "
" நான் வேணா கொஞ்ச நாளைக்கு MD யா இருக்கட்டுமான்னு கேட்டேன்! அதான் கண்டபடி திட்டினார் " என்றார் செல்வா.அழுதவாறு!
16 comments:
வந்துட்டேன்........வடை யாருக்கு ????????
//அறிவாளிகள் அழிவதில்லை! //
ஆம், அழிவதில்லை.. அழிக்கப் படுகிறார்கள்..
'வியர்வை', 'சிறுநீர்' - இவற்றிலும் 'உப்பு' இருப்பது செல்வாவிற்கு தெரியாதோ ? நல்லவேளை..
//Blogger மாலுமி said...
வந்துட்டேன்........வடை யாருக்கு ????????//
ஹி ஹி .. வடை உங்களுக்குத்தான் :-)
/// Blogger Madhavan Srinivasagopalan said...
'வியர்வை', 'சிறுநீர்' - இவற்றிலும் 'உப்பு' இருப்பது செல்வாவிற்கு தெரியாதோ ? நல்லவேளை..///
ஐயோ.. நல்லவேளை தெரியாது :-)
அறிவாளி செல்வா வாழ்கா....
செல்வா கதைகளை புத்தகமாக வெளியிட காபி டீ ரைட்ஸ் வேணும் அதுக்கு ஒரு அக்ரிமென்ட் போட்டுக்கலாமா...
//செல்வா கதைகளை புத்தகமாக வெளியிட காபி டீ ரைட்ஸ் வேணும் அதுக்கு ஒரு அக்ரிமென்ட் போட்டுக்கலாமா...//
ஹார்லிக்ஸ் ரைட்ஸ் வேணாலும் போட்டுக்கலாம் அண்ணா :-) ஹி ஹி
///
கோமாளி செல்வா said...
//செல்வா கதைகளை புத்தகமாக வெளியிட காபி டீ ரைட்ஸ் வேணும் அதுக்கு ஒரு அக்ரிமென்ட் போட்டுக்கலாமா...//
ஹார்லிக்ஸ் ரைட்ஸ் வேணாலும் போட்டுக்கலாம் அண்ணா :-) ஹி ஹி
////
சரி இதை புத்தகமா போட எவ்வளவு தருவே நீயே ஒரு அமோண்ட் சொல்லிடு...
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா......!!!! கலக்கல்....!!!
// அடேய், அது பல்லு விளக்கறதுக்கு பயன்படுத்துறது ! ஏண்டா உயிரை எடுக்குறீங்க ? விளம்பரத்துலதான் இது போட்டு பல்லு விளக்கலைனா பல்லு போய்டும்னு சொல்லுறாங்க , நீ அத விட ! கொடுமைடா! " என்று அலுத்துக்கொண்டே குழம்பினை எடுத்து குப்பையில் கொட்டிவிட்டு வெளியில் சென்று சாப்பிட்டுகொள்வதாகக் கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார்.//
பசியோடு வந்தவனை இப்பிடி கொடுமை படுத்திட்டியே நீ உருப்படுவியா...
//செல்வாவிற்கு ஒன்றும் புரியவில்லை. டூத்பேஸ்ட்டில் உப்பு இருக்கு என்று விளம்பரத்தைப் பார்த்துதானே அப்படிசெய்தோம் என்று குழம்பிப்போனார்.
//
உன்னை சொல்லி குத்தமில்லை கண்ணா அந்த விளம்பரத்தால இப்பிடி ஒரு கொடுமை நடக்கும்னு தெரிஞ்சிருந்தா, விளம்பரம் போட்டவனே தற்கொலை பண்ணி செத்துருப்பான் ஹே ஹே ஹே ஹே..
//" நான் வேணா கொஞ்ச நாளைக்கு MD யா இருக்கட்டுமான்னு கேட்டேன்! அதான் கண்டபடி திட்டினார் " என்றார் செல்வா.அழுதவாறு!//
யப்பா ஆளை விடு சிரிச்சே அழுதுருவேன் போல......
யோவ்
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
முடிஞ்ச பதில் சொல்லுங்க
http://speedsays.blogspot.com/2011/05/talk-me.html
///'வியர்வை', 'சிறுநீர்' - இவற்றிலும் 'உப்பு' இருப்பது செல்வாவிற்கு தெரியாதோ ? நல்லவேளை..///
என்னா... ஐடியா????
'வியர்வை', 'சிறுநீர்' - இவற்றிலும் 'உப்பு' இருப்பது செல்வாவிற்கு தெரியாதோ.
\\
ஏன் இந்த வில்லத்தனம்..?
Post a Comment