Tuesday, May 24, 2011

ஆவினன்குடி தரிசனம்!


செல்வாவின் வீட்டிற்கு ஜோதிடர் ஒருவர் வந்திருந்தார்.

செல்வாவின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு " உங்க ஜாதகத்துல 12 ல ராகு இருக்குறது அவ்வளவு நல்லதில்லையே?! " என்றார்.

"அப்படின்னா அந்த 12 வது கட்டத்த அடிச்சு விட்டிருங்க , ராகு போய்டுவார்ல ?! " என்றார் செல்வா.

கோபம் வந்தாலும் அதனை மறைத்துக்கொண்டு " அப்படியெல்லாம் பண்ண முடியாது , நீங்க ஒரு தடவ பழனி மலை அடிவாரத்துல இருக்குற திருஆவினன்குடி கோயிலுக்குப் போயிட்டு வாங்க! உங்களுக்கு நல்லது! , வேற எதாச்சும் சந்தேகம் இருக்கா ? " என்று கேட்டார் சோதிடர்.

" இருக்கு , ஆனா உங்களுக்கு தெரியுமா இல்லியான்னு தெரியலையே ?! "

" சும்மா கேளுங்க , எனக்கு தெரிஞ்சா கண்டிப்பா சொல்லுறேன்! " 

" ஆடு ஏன் வெள்ளைக் கலர்லயும் , கருப்புக்கலர்லையும் மட்டும் குட்டி போடுது ? ஏன் பச்சை , சிவப்புக் கலர்ல குட்டி போடுறது இல்லை ?! " என்று தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினார் செல்வா. இந்தக் கேள்வியினை காதில் வாங்கிய சோதிடர் அவரது மூளைக்கு இந்தக்கேள்வி செல்வதற்குள் செல்வாவின் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.

சில நாட்களுக்குப் பிறகு செல்வா சோதிடர் சொன்னது போல பழனி திருஆவினன்குடி கோவிலுக்குச் செல்லலாம் என்று கிளம்பினார்.

பேருந்து நிலையத்தில் இறங்கிய செல்வா கோவிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது கோவிலிலிருந்து ஒரு 200 மீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருந்த பொழுது அங்கிருந்த தேங்காய் பழம் விற்கும் கடைக்காரர் ஒருவர் " உங்க செருப்ப இங்க விட்டுட்டுப் போங்க! காசு தரவேண்டாம்! " என்றார்.

செல்வாவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நம்ம மேல அவ்ளோ மரியாதையா என்று நினைத்துக்கொண்டு  செருப்பினை அவரது கடையில் விட்டுவிட்டு கோவிலுக்குச் செல்ல முற்பட்டார். 

" சார், சாமிக்கு தேங்காய் பழம் வாங்கிட்டு போங்க! " என்றார் கடைக்காரர்.

செல்வா ஏற்கெனவே வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்ததால் வேண்டாமென்றார்.

" அப்படின்னா செருப்ப எடுத்துகோங்க , தேங்காய் பழம் வாங்கினா மட்டும்தான் நாங்க உங்க செருப்பப் பார்த்துக்குவோம்"  என்று கூறியதால் செல்வா தனது செருப்பினை போட்டுக்கொண்டு கோவிலை நோக்கிச் சென்றார்.

அடுத்த கடைக்காரரும் அதே போல அழித்து அங்கேயும் தேங்காய் பழம் வாங்க வேண்டும் என்று கூறியதால் மீண்டும் செருப்பினைப் போட்டுக்கொண்டு கோவில் வாசல் வரை சென்றுவிட்டார். 

அங்கு செருப்பினை விடுவதற்கு ஏதேனும் கடைகள் இருக்கின்றதா என்று சுற்றும் முற்றும் பார்த்தவர் எங்கும் கடைகள் இல்லாததால் கோவில் வாசலில் விட்டுவிட்டு கோவிலுக்குள் சென்றார்.

கோவிலுக்குள் சென்றவர் கோவிலின் கருவறையைச் சுற்றிவந்துவிட்டு நேராக முருகப்பெருமானைப் பார்த்து " என்னோட செருப்ப யாரும் எடுத்துட்டுப் போய்டக்கூடாது! " என்று வேண்டிவிட்டு வேகமாக கோவிலிலிருந்து வெளியில் வந்தார்! பழனி சென்று செருப்பினை யாரும் எடுத்துட்டுப் போய்டக்கூடாது என்று வேண்டியவர் இவர் ஒருவராகத்தான் இருப்பார்.

பின்குறிப்பு : இந்தக் கதைல சோதிடர் சொன்னதா சொன்னது கற்பனை. ஆனா நான் பழனி கோவிலுக்குப் போனதும் அந்த தேங்காய் பழக்கடைக்காரர் கூப்பிட்டதும் உண்மை. ஆனா நான் வேண்டினது கற்பனை. ஏன்னா நான் என்ன வேண்டுவேன்னு உங்களுக்குத் தெரியும். நான் சீக்கிரமா RJ ஆகணும்கிறத  தவிர வேற என்ன வேண்டிக்கப்போறேன்?

13 comments:

மாணவன் said...

//நான் என்ன வேண்டுவேன்னு உங்களுக்குத் தெரியும். நான் சீக்கிரமா RJ ஆகணும்கிறத தவிர வேற என்ன வேண்டிக்கப்போறேன்?//

உன் வேண்டுதல் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள் செல்வா :)

கடம்பவன குயில் said...

ஹலோ செல்வா, கடைசியில் வாசலில் செருப்பு இருந்ததா? இல்லையா?....

என்னாச்சு ரொம்பநாள் கதைக்கு லீவு விட்டுட்டீங்க.

செல்வா said...

///உன் வேண்டுதல் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள் செல்வா :)///

நன்றி அண்ணா :-)

செல்வா said...

///
என்னாச்சு ரொம்பநாள் கதைக்கு லீவு விட்டுட்டீங்க. ///

வேலை அதிகமா இருந்துச்சுங்க .. அதான் எழுத முடியலை!
நன்றிங்க :-)

Madhavan Srinivasagopalan said...

RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ
RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ
RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ RJ.......
~

MANO நாஞ்சில் மனோ said...

அந்த சோதிடன் வாழ்க்கையை வெறுத்து கிணத்துல குதிச்சிட்டாராம்...!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////நான் சீக்கிரமா RJ ஆகணும்கிறத தவிர வேற என்ன வேண்டிக்கப்போறேன்? //////

நாங்களும்.........!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உன் வேண்டுதல் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள் செல்வா :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////நான் சீக்கிரமா RJ ஆகணும்கிறத தவிர வேற என்ன வேண்டிக்கப்போறேன்? //////

நாங்களும்.........!//

ஏன் மச்சி கதை எழுதி கொல்றானா?

உணவு உலகம் said...

///////நான் சீக்கிரமா RJ ஆகணும்கிறத தவிர வேற என்ன வேண்டிக்கப்போறேன்? //////
எங்கள் வேண்டுதலும் அதுதான். இறையருள் விரைவில் கிடைக்கட்டும்.

உணவு உலகம் said...

தமிழ்மணம் ஏழு.

Unknown said...

நடக்கும் கவலைப்படதேய்யா மாப்ள!

Unknown said...

vaalga valamudan

ellam nadakum..