.
நண்பரின் வீட்டிற்குச் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தார் செல்வா.
செல்வாவின் பக்கத்து வீட்டுப் பெண் ( குழந்தை என்று சொல்லலாம் , இரண்டாம் வகுப்பு படித்துகொண்டிருக்கிறாள் ) கையில் ஷாம்பூ பாக்கட்டுடன் வந்துகொண்டிருந்தாள்.
" சைக்கிள்ள போலாம்ல , ஏன் நடந்து போற ? " என்றார் செல்வா.
" சைக்கிள் ஓட்ட தெரிஞ்சா நான் ஏன் அண்ணா நடந்து போகப்போறேன் ? " என்றாள் அந்தச் சிறுமி.
" அட , எனக்கும் கூடத்தான் பஸ் ஓட்டத் தெரியாது , நான் பஸ்ல போகலையா என்ன ? "
செல்வாவின் இந்த நக்கலைக் கேட்டதும் கீழே இருந்த ஒரு கல்லைக் கையில் எடுத்தாள். சற்று பயந்த செல்வா " அட சும்மா லுளுலாய்க்கு சொன்னேன் , ஹி ஹி " என்று வழியலானார்.
அந்தச் சிறுமியும் செல்வாவை முறைத்துக்கொண்டே சென்றுவிட்டாள்.
சிறிது நேரம் பேருந்திற்காகக் காத்திருந்த செல்வா சட்டென எதையோ மறந்தவராக " அடச்சே" என்று தலையில் அடித்துக்கொண்டு திரும்பி வீட்டிற்கே சென்றார்.
வீட்டிற்குச் சென்றவர் வாடகைக்கு இரண்டு மினி ஆட்டோக்களை அழைத்தார். ஒரு ஆட்டோவின் மீது ஆளுயரக் கண்ணாடியை வைத்துவிட்டு இன்னொரு ஆட்டோவின் மீது ஏறி அமர்ந்துகொண்டார்.
வடிவேலு ஸ்டைலாக ஆட்டோவின் மீது அமர்ந்து எதிரிலுள்ள ஆட்டோவில் தனது உருவத்தைப் பார்த்தாவாறே பயணம் செய்தார்.
நண்பரின் வீடு வந்ததும் கீழே இறங்கிக்கொண்டு அந்தக் கண்ணாடியையும் எடுத்து தனக்கு முன்னர் பிடித்தவாறு நண்பரின் வீட்டிற்குள் சென்றார்.
தனது உருவத்தைப் பார்த்தவாறே சென்றதால் எதிரில் என்ன இருக்கிறதென்பதைப் பார்க்கமுடியாமல் தவறிக் கீழே விழுந்தார்.
சத்தம் கேட்டு வெளியில் வந்த அவரது நண்பர் செல்வா கீழே விழுந்து கிடப்பதையும் , கண்ணாடி உடைந்து கிடப்பதையும் பார்த்தார்.
" என்ன எழவுடா இது ? " என்று திட்டியவாறே கீழே விழுந்துகிடந்த செல்வாவைத் தூக்கினார்!
" நீதான நேத்திக்கு எங்கிட்ட ஒடம்ப பார்த்துக்கனு சொன்ன, அதான் ஒடம்ப பார்க்கணும்னா கண்ணாடி வேணும்ல அதுக்குதான் வாங்கி ஆட்டோ வாடகைக்கு வச்சு ஒடம்ப பார்த்துட்டே வந்தேன். இங்கயும் கண்ணாடியே எடுத்து ஒடம்ப பார்த்துட்டே வந்தேனா திடீர்னு கீழ விழுந்திட்டேன்! " என்றார் செல்வா.
" நீயெல்லாம் திருந்தவே மாட்டியா ? எதையுமே அப்படியேதான் புரிஞ்சிக்குவியா ? என்ன சொல்லவராங்கன்னு புரிஞ்சிக்காம அப்புறம் அவன் சொன்னான் இவன் சொன்னான்னு பழிபோடுறது! ஒடம்ப பார்த்துக்கறதுனா கண்ணாடில பாக்குறது இல்ல ! "
" அப்படின்னா வீடியோ எடுத்து அதுல பாக்கணுமா ? " அப்பாவியாகக் கேட்டார் செல்வா.
ஏதோ சொல்ல வாயைத் திறந்த அவரது நண்பர் கோபமாக முறைத்துவிட்டு செல்வாவின் காயங்களுக்கு மருந்து எடுக்கச் சென்றார்.
வாழ்த்து : நம்ம எல்லோரும் எப்படா இந்த பருவத்தைத் தாண்டுவோம் அப்படின்னு யோசிச்சிருப்போம் , ஆனா அது எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்படின்னு இன்னும் மாணவனாவே இருக்கிற எங்கள் மாணவன் சிலம்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!

35 comments:
வந்துட்டேன்..
இங்க வந்ததுக்கு நான் ரொம்ப பீல் பண்றேன்...
அடேய்...
மறுபடியும் செல்றேன் உடம்ப பார்த்துக்கே....
என்னது மறுபடியும் கண்ணாடி கேக்கறையா..
///
அது எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்படின்னு இன்னும் மாணவனாவே இருக்கிற எங்கள் மாணவன் சிலம்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! ////
நாமளும் ஒரு வாழ்த்தை போட்டு வைப்போம்...
உண்மையில் நீ அறிவு கொழுந்து தான் உண்மையில் அந்த பஸ் மேட்டர் ல சிரிச்சேன்..!!!சூப்பர் டா
//அட , எனக்கும் கூடத்தான் பஸ் ஓட்டத் தெரியாது , நான் பஸ்ல போகலையா என்ன ? //
அடேய்......எட்றா அந்த கல்லை....
// நீதான நேத்திக்கு எங்கிட்ட ஒடம்ப பார்த்துக்கனு சொன்ன, அதான் ஒடம்ப பார்க்கணும்னா கண்ணாடி வேணும்ல அதுக்குதான் வாங்கி ஆட்டோ வாடகைக்கு வச்சு ஒடம்ப பார்த்துட்டே வந்தேன். இங்கயும் கண்ணாடியே எடுத்து ஒடம்ப பார்த்துட்டே வந்தேனா திடீர்னு கீழ விழுந்திட்டேன்! " என்றார் செல்வா.//
ஐயய்யோ கொல்றானே கொல்றானே...
//அப்படின்னா வீடியோ எடுத்து அதுல பாக்கணுமா ? " அப்பாவியாகக் கேட்டார் செல்வா.//
வெளங்கும்...
பஸ் செமங்க.. கண்டிப்பா வேற எடத்துல நானும் யூஸ் பண்ணிக்கிறேன்.. :)
உதிரம் கொட்டும் அளவுக்கு நகைச்சுவை - ரத்தக் காவுலாம் வாங்குது வயிறு.. கொஞ்சம் கொறச்சுக்கலாம்ல :)
//மறுபடியும் செல்றேன் உடம்ப பார்த்துக்கே....
என்னது மறுபடியும் கண்ணாடி கேக்கறையா..//
அதெல்லாம் இல்ல , எப்படி உடம்ப பார்த்துக்கலாம்னு சொல்லிட்டு போங்க.. ஹி ஹி
//Blogger சௌந்தர் said...
உண்மையில் நீ அறிவு கொழுந்து தான் உண்மையில் அந்த பஸ் மேட்டர் ல சிரிச்சேன்..!!!சூப்பர் டா//
ஹி ஹி ... நன்றி மச்சி :-)
@ மனோ :
//அடேய்......எட்றா அந்த கல்லை....//
எதுக்கு எதுக்கு ?
//Blogger கடைக்குட்டி said...
பஸ் செமங்க.. கண்டிப்பா வேற எடத்துல நானும் யூஸ் பண்ணிக்கிறேன்.. :)
உதிரம் கொட்டும் அளவுக்கு நகைச்சுவை - ரத்தக் காவுலாம் வாங்குது வயிறு.. கொஞ்சம் கொறச்சுக்கலாம்ல :)//
ரொம்ப நன்றிங்க! ரொம்ப மகிழ்ச்சியாவும் இருக்கு :-))
குழந்தைகள்கிட்ட கூட மொக்க போடாம இருக்கமாட்ட போல ...:))
ha,ha,ha.........super selva ....antha bus mettar romba super..... yeppadi ippadiyellaam yosikkira
ullaen ayya...
yaarellam irukeenga...
மாணவன் சிலம்புக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!
ரொம்ப அருமை செல்வா
// அட , எனக்கும் கூடத்தான் பஸ் ஓட்டத் தெரியாது , நான் பஸ்ல போகலையா என்ன ? "///
இது சூப்பர் டா தம்பி .......
மாணவன் சிலம்புக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!(இது ஒரு காப்பி பேஸ்ட் )
நிஜமாவே உங்க கதைகளை படிக்க வந்தாலே சிரிச்சு சிரிச்சே வயிறு நோவுதடா சாமி!
// அட , எனக்கும் கூடத்தான் பஸ் ஓட்டத் தெரியாது , நான் பஸ்ல போகலையா என்ன ? "///
இது ஒன்று போதாதா? என் ஸ்டேட்மெண்ட்டுக்கு proof.
கண்ணாடி உடையும்போது,உடம்பும் உடைந்து போய் விட்டதே என்று வருத்தம் வரவில்லையா!
அறிவு கொழுந்து....
//அறிவுக்கொழுந்து//
செம்ம கலக்கல் செல்வா...இன்னும் இதுபோன்ற பல அறிவுசார்ந்த சிந்தனைகதைகளை எழுத வேண்டும் :)
//வாழ்த்து : நம்ம எல்லோரும் எப்படா இந்த பருவத்தைத் தாண்டுவோம் அப்படின்னு யோசிச்சிருப்போம் , ஆனா அது எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்படின்னு இன்னும் மாணவனாவே இருக்கிற எங்கள் மாணவன் சிலம்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!//
ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும்இருக்கு செல்வா உங்களைப்போன்ற நண்பர்களின் நட்பு கிடைத்ததில்... அன்புகலந்த வாழ்த்துக்கு மிக்க நன்றி செல்வா :)
வாழ்த்திய அனைத்து அன்புநெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி...
:)
//Blogger karthikkumar said...
குழந்தைகள்கிட்ட கூட மொக்க போடாம இருக்கமாட்ட போல ...:))//
யாரா இருந்தா என்ன மச்சி ? ஹி ஹி .. மொக்கைதான முக்கியம்
/Blogger மங்குனி அமைச்சர் said...
ha,ha,ha.........super selva ....antha bus mettar romba super..... yeppadi ippadiyellaam யோசிக்கிற//
ரொம்ப நன்றி அண்ணா :-)
//Blogger Arun Prasath said...
ullaen ayya...
yaarellam irukeenga...//
எல்லோருமே இருக்கோம் .. ஹி ஹி
//Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மாணவன் சிலம்புக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!//
நானும் நானும் .. ஹி ஹி
//Blogger VELU.G said...
ரொம்ப அருமை செல்வா//
//Blogger இம்சைஅரசன் பாபு.. said...// அட , எனக்கும் கூடத்தான் பஸ் ஓட்டத் தெரியாது , நான் பஸ்ல போகலையா என்ன ? "///
இது சூப்பர் டா தம்பி .....//
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா :-))
//நிஜமாவே உங்க கதைகளை படிக்க வந்தாலே சிரிச்சு சிரிச்சே வயிறு நோவுதடா சாமி! //
ரொம்ப ரொம்ப நன்றிங்க :-))
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு!
//Blogger சென்னை பித்தன் said...
கண்ணாடி உடையும்போது,உடம்பும் உடைந்து போய் விட்டதே என்று வருத்தம் வரவில்லையா!//
ஆமாங்க.. இத யோசிக்கவே இல்லையே.. ம்ம் .. நன்றி நன்றி
//Blogger கலாநேசன் said...
அறிவு கொழுந்து....//
ஹி ஹி.. ஆமா அண்ணா :-)
//செம்ம கலக்கல் செல்வா...இன்னும் இதுபோன்ற பல அறிவுசார்ந்த சிந்தனைகதைகளை எழுத வேண்டும் :)//
ஹி ஹி .. கண்டிப்பா :-))
நீதான நேத்திக்கு எங்கிட்ட ஒடம்ப பார்த்துக்கனு சொன்ன, அதான் ஒடம்ப பார்க்கணும்னா கண்ணாடி வேணும்ல அதுக்குதான் வாங்கி ஆட்டோ வாடகைக்கு வச்சு ஒடம்ப பார்த்துட்டே வந்தேன். இங்கயும் கண்ணாடியே எடுத்து ஒடம்ப பார்த்துட்டே வந்தேனா திடீர்னு கீழ விழுந்திட்டேன்! " என்றார் செல்வா.//
உட்கார்ந்து யோசிப்பாங்களோ,
புரிந்துணர்வினால் ஏற்படும் தவறுகளை உங்களின் கதை நக்கலாகச் சொல்லுகிறது.
அறிவுக் கொளுந்து எனும் வார்த்தையினை எங்கள் ஊரில் அடிக்கடி பாவித்து திட்டுவார்கள். பள்ளியில் பிழையான பதில் சொன்னாலோ, இல்லை ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு தவறாகப் பதில் சொன்னாலோ.
டோய்...நீ ஒரு அறிவுக் கொழுந்து என்று கிண்டலாகத் திட்டுவார்கள்.
Post a Comment