செல்வாவின் வீட்டில் கோழி ஒன்று அடைகாத்து வந்தது!
செல்வா ஏதேனும் ரகளை செய்துவிடுவார் என்று அஞ்சிய அவரது தாயார் செல்வாவிடம் எச்சரிக்கை செய்தார்.
செல்வா வழக்கம்போல தனது அறிவாளித்தனத்தை(?!) அரங்கேற்றி இருந்தார்.
சில நாட்களுக்குப் பிறகு கோழி அடைகாத்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து கெட்ட வாடை வருவதை உணர்ந்த அவரது தாயார் அது எதனால் வருகிறதென்று சோதித்தார்.
அடைகாக்க வைக்கப்பட்டிருந்த சில முட்டைகள் அவிக்கப்பட்டு , மசாலா பொடிகள் தூவப்பட்டு , எண்ணெயில் பொரிக்கபட்டிருந்தன!
செல்வாவின் தாயாருக்கு அதிர்ச்சி! யார் இப்படி செய்திருப்பார்கள் என்று அவர் நீண்ட நேரம் யோசிக்கவில்லை, செல்வாதான் இதை செய்திருப்பார் என்பதையும் ஊகித்தவர் செல்வாவிடம் விசாரித்தார்.
" எதுக்குடா முட்டைய அவிச்சு , மசாலா போட்டு வச்சிருக்க ? " என்றார் கோபமாக.
"எனக்கு எண்ணெய்ல பொரிச்ச கோழி வேணும் ,அதான் அப்படி பண்ணினேன்! "
" எண்ணெய்ல பொரிச்ச கோழி வேணும்னு , முட்டைய எதுக்கு அவிச்சு அடைல வச்சிருக்க ? "
" நீங்கதானே சொன்னீங்க பிற்காலத்துல என்ன ஆகணுமோ அத சின்ன வயசுல இருந்தே பழக்கப்படுத்திக்கணும்னு , அதான் இப்பவே அத அவிச்சு வச்சிட்டா அது கோழியா வளர்ந்ததுக்கு அப்புறம் இன்னொரு தடவ அவிக்க வேண்டாம்ல , அப்படியே பிடிச்சி சாப்ட்றலாம்ல? அதான் அப்படி பண்ணினேன்! " என்று தனது நியாயத்தைக் கூறினார் செல்வா.
செல்வாவின் இந்தப் பதிலைக் கேட்ட அவரது தாயார் " நீ சொல்லுறதும் சரிதான் , இங்க பல பேர் இப்படித்தான் இருக்காங்க! அவுங்க பசங்க பெரிய படிப்பாளியா வரணும்னு பக்கத்து வீட்டுப் பசங்ககூட கம்பேர் பண்ணுறது , அவன் ரண்டு வயசுலேயே நூறு திருக்குறள் மனப்பாடம் பண்ணிருக்கான் உனக்கு ஒண்ணுமே தெரியாது, நீ எதுக்குமே லாயக்கு இல்ல அப்படி இப்படின்னு திட்டவேண்டியது , அவனும் சின்ன வயசுல இருந்தே நாம எதுக்கும் ஆக மாட்டோம் போலன்னு நினைச்சு நினைச்சே வீணாப் போயிடறான்! " என்று கூறிவிட்டு செல்வாவிடம் அவித்த முட்டை குஞ்சு பொறிக்காது என்பதை விளக்கினார்.
28 comments:
புதிய தத்துவம் 1045..
ஜனங்களுக்கு மெசெஜ் சொல்ற அளவுக்கு பெரியாயிட்ட....
நடத்துங்க... நடத்துங்க...
நாளைக்கு வீட்டல்ல மாடு இருந்தா கொஞ்சம் டிகாசனை குடிக்க கெர்டு...
அப்புறம் மாடு நேரடியா டீ-யா கெர்டுக்கும்ல...
எப்பூடி..
விளையும் பயிர்!//
மாடு மேஞ்சிரும்..
@ கவிதை வீதி :
சும்மா மெசேஜ் ட்ரை பண்ணலாமேன்னு ? ஹி ஹி
செல்வாவின் தாயாருக்கு அதிர்ச்சி!//
நீ பிறக்கும்போது ஏற்பட்ட அதிர்ச்சியை விடவா பெரிது?
//நாளைக்கு வீட்டல்ல மாடு இருந்தா கொஞ்சம் டிகாசனை குடிக்க கெர்டு...
அப்புறம் மாடு நேரடியா டீ-யா கெர்டுக்கும்ல...//
ஹி ஹி ஹி .. இந்த ஐடியா நீங்க முயற்சி பண்ணினதா ?
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
விளையும் பயிர்!//
மாடு மேஞ்சிரும்.//
ஏய்..டெரர திட்டாத...
பார்டா முதல் கதை மட்டும் எழுதினான் இப்போ மெசஜ் வோட கதை எழுத ஆரம்பிச்சிட்டான்..
@ போலீஸ் :
மாட்ட கட்டி வைங்க :-)
@ வைகை :
/நீ பிறக்கும்போது ஏற்பட்ட அதிர்ச்சியை விடவா பெரிது?//
அதுக்குப் பேரு மகிழ்ச்சி .. இதுக்குப் பேரு அதிர்ச்சி .. ஹி ஹி
@ சௌந்தர் :
அதான் பாரேன் ..
சொந்த அனுபவமோ??
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
விளையும் பயிர்!//
மாடு மேஞ்சிரும்////
ஹி ஹி போலிஸ் ராக்ஸ் ..:))
சௌந்தர் said...
பார்டா முதல் கதை மட்டும் எழுதினான் இப்போ மெசஜ் வோட கதை எழுத ஆரம்பிச்சிட்டான்.////
ஒரு எழுத்தாளர் உருவாகிறான் ...:))
//ரண்டு வயசுலேயே நூறு திருக்குறள் //
இங்கேயும் திருகுறளா ....?
கோழி மிதிச்சி குஞ்சு சாகாது.....! (இது எதுக்கு...? எதுக்கோ....!)
ஐயோ மெசேஜா???? திரும்பவுமா???? என்ன செல்வா இது? செல்வா டிரேட் மார்க், டிரெண்ட் இல்லாமல் மெசேஜ் எல்லாம் சொல்லி்க்கிட்டு நமக்கு தேவையா இது? கமான் கமான் பழைய செல்வாவா ஆகிடுங்க சீக்கிரம்
// கடம்பவன குயில் said...
ஐயோ மெசேஜா???? திரும்பவுமா???? என்ன செல்வா இது? செல்வா டிரேட் மார்க், டிரெண்ட் இல்லாமல் மெசேஜ் எல்லாம் சொல்லி்க்கிட்டு நமக்கு தேவையா இது? கமான் கமான் பழைய செல்வாவா ஆகிடுங்க சீக்கிரம்//
repeatu
// # கவிதை வீதி # சௌந்தர் said...
நாளைக்கு வீட்டல்ல மாடு இருந்தா கொஞ்சம் டிகாசனை குடிக்க கெர்டு...
அப்புறம் மாடு நேரடியா டீ-யா கெர்டுக்கும்ல...// - செம்ம சிரிப்பு !!
எப்பவாச்சும் மெசேஜ் ஓகே. எப்பவும் வேண்டாம். சின்ன கருத்து (நானும் மெசேஜ் சொல்றேனோ?)
//செல்வா ஏதேனும் ரகளை செய்துவிடுவார் என்று அஞ்சிய அவரது தாயார் செல்வாவிடம் எச்சரிக்கை செய்தார்.//
அப்போ அவங்களும் அலர்ட்டாதான் இருக்காங்க போல....
//எண்ணெய்ல பொரிச்ச கோழி வேணும்னு , முட்டைய எதுக்கு அவிச்சு அடைல வச்சிருக்க ? //
ஆஹா ஆரம்பிச்சுட்டானே....
// நீங்கதானே சொன்னீங்க பிற்காலத்துல என்ன ஆகணுமோ அத சின்ன வயசுல இருந்தே பழக்கப்படுத்திக்கணும்னு , அதான் இப்பவே அத அவிச்சு வச்சிட்டா அது கோழியா வளர்ந்ததுக்கு அப்புறம் இன்னொரு தடவ அவிக்க வேண்டாம்ல , அப்படியே பிடிச்சி சாப்ட்றலாம்ல? அதான் அப்படி பண்ணினேன்! " என்று தனது நியாயத்தைக் கூறினார் செல்வா.//
ஹய்யோ ஹய்யோ ஆண்டவா.....
//அவித்த முட்டை குஞ்சு பொறிக்காது என்பதை விளக்கினார்.//
அப்பவாவது மண்டையில எறிச்சா...
தமிழ்மணம் எங்கடா தம்பி காணோம்...???
// இங்க பல பேர் இப்படித்தான் இருக்காங்க! அவுங்க பசங்க பெரிய படிப்பாளியா வரணும்னு பக்கத்து வீட்டுப் பசங்ககூட கம்பேர் பண்ணுறது ,//
கதை சாதாரணமாக இருப்பதாக தோன்றினாலும், இறுதியில் சொல்லியிருக்கும் "கதையின் நீதி" அற்புதம்..
//பார்டா முதல் கதை மட்டும் எழுதினான் இப்போ மெசஜ் வோட கதை எழுத ஆரம்பிச்சிட்டான்.////
ஒரு எழுத்தாளர் உருவாகிறான் ...://
உண்மைதான். எழுத்தாளரானால் ஒரு ரேடியோ ஜாக்கியை நாடு இழக்க நேரிடுமோ?
Post a Comment