”ஒரு வட்டத்திலிருந்து மூன்று வட்டங்களை உருவாக்க முடியுமா.?” என்று ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு வகுப்பிலிருந்த அனைவரையும் உற்றுப்பார்த்தார் செல்வாவின் கணக்கு ஆசிரியர்.
எல்லா மாணவர்களும் ஆச்சர்யமாகவும் , அதே சமயம் அது எப்படி முடியும் என்றும் குழம்பிக்கொண்டிருந்தனர்.
அரைமணி நேர அவகாசம் தருவதாகவும், அதற்குள் எப்படி என்று யோசித்துச் சொல்பவர்களுக்கு ஒரு பரிசு தருவதாகவும் கூறியிருந்தார்.
எல்லா மாணவர்களும் தங்களால் இயன்றமட்டும் யோசித்துப் பார்த்தனர். ஆனால் ஒருவராலும் அது எப்படி என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. செல்வாவும் யோசித்தார். அவராலும் முடியவில்லை. பின் எல்லா மாணவர்களும் தங்களால் அதைக் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று ஒப்புக்கொண்டு அவரையே விளக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
ஒரு வெள்ளைக் காகித்தை எடுத்த ஆசிரியர் முதலில் பெரிதாக ஒரு வட்டத்தை வரைந்தார். பின் அந்தக் காகிதத்தின் நடுவில் ஒரு கோட்டினை வரைந்து கோட்டிற்கு வலது பக்கம் அதே போல மற்றொரு வட்டத்தை வரைந்தார். அந்த வட்டத்தின் மையப்பகுதியில் மற்றொரு சிறிய வட்டத்தினை வரைந்து அந்தச் சிறிய வட்டத்திற்கு வேறொரு வண்ணம் தீட்டினார்.
பின்னர் அந்தச் சிறிய வட்டத்தின் அளவைப் போலவே மற்றொரு வட்டத்தை பெரிய வட்டத்தின் கீழ்ப் பகுதியில் வரைந்துவிட்டு அவ்வளவுதான் என்றார்.
மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. புதிதாக வட்டம் வரைந்துவிட்டு அதை எப்படி ஒரு வட்டத்திலிருந்து வந்ததாக எடுத்துக்கொள்ளமுடியும் ? என்ற குழப்பம் அவர்களுக்கு.
மாணவர்களின் குழப்பத்தை அறிந்த ஆசிரியர் “ அதாவது அந்தப் பெரிய வட்டத்துல இருந்து இந்தச் சின்ன வட்டத்த வெட்டி எடுத்துட்டேன். அப்படி வெட்டி எடுத்த இடம்தான் பெரிய வட்டத்துல நடுவுல இருக்கிற வட்டம். அதே மாதிரி பெரிய வட்டத்திலிருந்து வெட்டின அந்தச் சின்ன வட்டம்தான் கீழ இருக்கிற சின்ன வட்டம். இப்போ மூணு வட்டம் வந்திச்சா ? “ என்றார்.
மாணவர்களுக்குக் கொஞ்சம் புரிந்தது போலவும், கொஞ்சம் குழப்புவதாகவும் இருந்தது.
அப்பொழுது டக்கென எழுந்த செல்வா “ சார், ஒரு வட்டத்துல இருந்து அதே சைசுக்கு இன்னொரு வட்டத்த உருவாக்க முடியுமா.? “ என்றார்.
சிறிது நேரம் யோசித்த ஆசிரியர் “ அது முடியாதே! “ என்றார்.
”இல்ல சார், உருவாக்கமுடியும்!” இது செல்வா.
“ எப்படி ? “
செல்வாவும் அவரைப் போலவே ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்துக்கொண்டு அவரிடம் ஓடி, அந்த வெள்ளைப் பேப்பரின் இரண்டு பக்கங்களிலும் ஒரே அளவுள்ள இரண்டு வட்டங்களை வரைந்துவிட்டு “ அவ்ளோதான்!” என்றார்.
இப்பொழுது ஆசிரியருக்குக் குழப்பம். “என்ன அவ்ளோதான் ? இந்த வட்டம் எப்படி வந்துச்சு ?“
“ சார், நான் முதல்ல வரைஞ்ச வட்டத்த குறுக்கால வெட்டிட்டேன். அதோட முதல்பாதி அங்க இருக்கு. இன்னொரு பாதி இந்த வட்டம்! “ என்றார் செல்வா.

30 comments:
அடாடா ..
வட்ட வட்டமா இந்த சுத்து சுத்துறானே...
// அடாடா ..
வட்ட வட்டமா இந்த சுத்து சுத்துறானே...//
ஏன்னா வாழ்க்கை ஒரு வட்டம்ல. அதனாலதான்ணா :)
இந்த பூமி வட்ட வடிவமானது, அந்த வட்ட வடிவத்தில் நிறைய வட்டம் இருக்கும், அதில் ஏதேனும் ஒரு வட்டத்தில், வட்ட தலை கொண்ட மனிதனுக்கு இது போல வட்ட வட்டமாக யோசிக்கும் திறன் இருக்குமாம். #சரியா கமெண்ட் போடுறேனா?
@ பிரபு :
உன் தலையும் வட்டமாவா இருக்கு ? :))
நல்ல வேளை வெட்டி பார்க்கவானு கேக்காம விட்டிங்களே
@ பிரபு :
அப்படி கேட்டா நீ தப்பிச்சு ஓடிருவ இல்ல, அதனால கேக்கல :))
அப்போ இதுக்கு ஒரு வட்ட மேஜை மாநாடு போட்டுதான் பார்க்கணும்.
ஏன் அங்க இருந்து எப்படியாவது தப்பிச்சிரலாம்னு நினைச்சுட்டிருக்கியா ?
// சார், நான் முதல்ல வரைஞ்ச வட்டத்த
குறுக்கால வெட்டிட்டேன். அதோட முதல்பாதி
அங்க இருக்கு. இன்னொரு பாதி இந்த வட்டம்! “ //
அப்ப ரெண்டு அரை வட்டம் தானே வரும்.?!
Prabu Krishna said...
நல்ல வேளை வெட்டி பார்க்கவானு கேக்காம விட்டிங்களே
>>
செல்வா கேட்டாலும் கேட்பார். சீக்கிரம் பிளாக்கை விட்டு ஓடிப்பொயிடுங்க பிரபு
@ வெங்கட் :
இல்லை, நான் சொல்லுறது குறுக்காக (பிளத்தல் ). அதாவது ஒரு ரூபாய் நாணயத்தை குறுக்காக வெட்டினால் தலை இருப்பது ஒரு காசாகவும், பூ இருப்பது ஒரு காசாகவும் போயிடும்ல. அந்தமாதிரிணா ))
P = 2πr
A = πr2
// P = 2πr
A = πr2//
இதென்ன புதுசா இருக்கு :))
எலேய் அந்த வாத்தி குழம்பி இருக்கானா இல்லை நீ குழம்பி இருக்கியா அல்லது நான் சரியாதான் பேசுரனா....?
டேய் எதுக்குடா அண்ணனை போட்டு வறுத்து எடுக்குற ராஸ்கல்...
வட்டத்தை பார்த்து மக்களுக்கு வட்டு [[மறை]] களறாம இருந்தால் சரிடே மக்கா...
@ மனோ :
வாத்தியார்தான் குழம்பிட்டார்ணா :))
ஸ்...ப்பா முடியலை - தலை சுத்துதுடா சாமியோவ்...
இனிமே எந்த காலேஜ்’லயாவது செல்வாவுக்கு அட்மிஷன் குடுத்திருந்தா நடக்குரதே வேற.....
புரியல்லைங்க ஒரே வட்டமா / சுத்த சுத்துது. இனிமே கணக்கு வாத்தியார பார்த்த எடுக்கணும் ஓட்டம்
@ மனசாட்சி :
எந்தப் பக்கமா சுத்துதுங்க ?
// Mohamed Faaique said...
இனிமே எந்த காலேஜ்’லயாவது செல்வாவுக்கு அட்மிஷன் குடுத்திருந்தா நடக்குரதே வேற.....//
நான் போனாத்தானே ? :))
// K N MALOLAN said...
புரியல்லைங்க ஒரே வட்டமா / சுத்த சுத்துது. இனிமே கணக்கு வாத்தியார பார்த்த எடுக்கணும் ஓட்டம்//
விடுங்க விடுங்க :)) இதுக்கெல்லாம் பயந்து ஓடினா எப்படி ? :))
வாழ்க்கையே ஒரு வட்டம்தான், அதுல இந்த வட்டம் எப்ப வருதுன்னு தெரியல.....
Selva....
Unakku antha
online - karan
thevalai........
Mudiyalai........!!!!!!!
வட்டம் நன்றாக உள்ளது. நன்றி!
என்னா அறிவு..!! :)
வட்டம்னா சதுரமாத்தானே இருக்கும்? :-)
// Selvakumar selvu said...
// P = 2πr
A = πr2//
இதென்ன புதுசா இருக்கு :))//
இதான் வட்டம் வரையறுதுக்கான சூத்திரமா இருக்குமோ? :-)
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் செல்வா!
Post a Comment