செல்வாவின் பக்கத்து வீட்டில் டாமி என்ற செல்லப்பிராணியை வளர்த்து வந்தார்கள்.
அதன் விளையாட்டுத்தனமும், கொழுகொழுவென்று வளர்ந்திருந்த அதன் முடிகளும், “வள் வள்” என்று வாலாட்டிக்கொண்டே அது குறைக்கும் விதமும் செல்வாவிற்கு வெகுவாகப் பிடித்துப்போனது. தானும் ஒரு டாமி வாங்கி வளர்க்கவேண்டும் என்று நினைத்தார்.
அடுத்தவாரமே மிகச் சிரமப்பட்டு அதே போன்றதொரு அழகான வெள்ளை நிற டாமியை வாங்கி வந்துவிட்டார் செல்வா.
அவர்கள் செய்யும் அனைத்தையும் செல்வாவும் செய்தார். அதற்கு தினமும் பால் வைப்பதும், சாப்பாடு வைப்பதுமாக கண்ணும் கருத்துமாக வளர்த்துவந்தார். இரண்டு நாட்களுக்கொருமுறை ஷாம்பூ போட்டுக் குளிப்பாட்டவும் செய்தார்.
அவர்கள் டாமியை விட செல்வாவின் டாமி சற்றுப் பெரிதாக இருந்தது. ஆனால் வால் மட்டும் குட்டையாக இருந்தது. உருவம் பெரிதாக இருக்கிறதென்று ஒருபுறம் சந்தோசமாகவும், மற்றொருபுறம் வால் சிறிதாக இருக்கிறதென்று வருத்தமாகவும் இருந்தது.
தனது டாமியும் அவர்களின் டாமியைப் போல் வெள்ளையாக இருந்தாலும் சாப்பாடு வைத்தால் வாலாட்டுவது இல்லையே என்று செல்வாவிற்கு வருத்தமாக இருந்தது. இருந்தாலும் வளர்ந்தால் பழகிக்கொள்ளும் என்று நம்பிக்கையுடன் இருந்தார்.
செல்வாவின் டாமியோ வாலாட்டாததுடன் யாரேனும் வந்தால் குறைப்பதும் இல்லை. தனது டாமிக்கு என்னவோ குறை உள்ளது என்று நினைத்த செல்வா அதனைக் கால்நடை மருத்துவரிடம் எடுத்துச் சென்று அதன் குறைகளைப் பற்றிச் சொன்னார்.
பக்கத்து வீட்டுக்காரரின் டாமியைப் பற்றியும் அதை அவர்கள் வளர்ப்பதைப் பற்றியும் சொல்லிவிட்டு தானும் தனது டாமியை அவ்வாறேதான் வளர்ப்பதாகவும் ஆனாலும் தனது டாமி குறைப்பதில்லை என்றும் புலம்பினார்.
செல்வாவின் டாமியையும் செல்வா சொன்ன குறைகளையும் பார்த்து மருத்துவருக்குச் சிரிப்பு வந்தது. சிரிப்பை ஒருவாறு அடக்கிக் கொண்டு “ உங்க டாமி குறைக்காது! “ என்றார்.
” எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல, இத எப்படியாவது குறைக்க வையுங்க! “ என்று கெஞ்சலாகக் கேட்டார் செல்வா.
“ என்னதான் செலவு பண்ணினாலும், டாமினு பேர் வச்சுக் கூப்பிட்டாலும், சாப்பாடு போட்டாலும் ஆட்டுக்குட்டிய நாய்க்குட்டியா மாத்த முடியாது! அந்த டெக்னாலஜி இன்னும் வளரல!“ சிரித்தவாறே பதிலளித்தார் மருத்துவர்.
17 comments:
நாய்ப் பாலுக்கு ஆட்டுப்பால் எவ்ளவோ மேல்..
ரெண்டு லோட்டா பிடிச்சு டெய்லி குடி..
கொலை பண்ணி வெகு நாள் ஆயிடுச்சு...
ஆங்.... என்னங்க தம்பி சொன்னீங்க?
:)
//ஆட்டுக்குட்டிய நாய்க்குட்டியா மாத்த முடியாது//
டேய்... முடியலைட சாமி...முத்தி போச்சே
அடுத்ததாக ஸ்பீச் தெரபிஸ்டிடம் செல்வா தன் டாமியை கொண்டு போனார்!:-)
// நாய்ப் பாலுக்கு ஆட்டுப்பால் எவ்ளவோ மேல்..
ரெண்டு லோட்டா பிடிச்சு டெய்லி குடி..//
:))
//கொலை பண்ணி வெகு நாள் ஆயிடுச்சு...
ஆங்.... என்னங்க தம்பி சொன்னீங்க?//
ஒன்னுமே சொல்லலீங்! :))
//
டேய்... முடியலைட சாமி...முத்தி போச்சே//
உண்மைதானுங்களே ? :))
//Blogger எஸ்.கே said...
அடுத்ததாக ஸ்பீச் தெரபிஸ்டிடம் செல்வா தன் டாமியை கொண்டு போனார்!:-)//
பாவம் அந்த டாமிக்கு ஒன்னுமே தெரியமாட்டீங்குது!
“ என்னதான் செலவு பண்ணினாலும், செல்வான்னு பேர் வச்சுக் கூப்பிட்டாலும், சாப்பாடு போட்டாலும் செல்வாவ புத்திசாலியா மாத்த முடியாது! அந்த டெக்னாலஜி இன்னும் வளரல!“ சிரித்தவாறே பதிலளித்தார் மருத்துவர்.
LOL....
SSSSSS...APA...
MUDIYALAI....
@வெளங்காதவன் said...
////கொலை பண்ணி வெகு நாள் ஆயிடுச்சு...
ஆங்.... என்னங்க தம்பி சொன்னீங்க?//
வெளங்காதவனுக்கு பெரிய கத்தியா பாத்து பார்சல் பண்ணுங்கப்பா....
என்னது ஆட்டுக்கு டாமின்னு பேரு வச்சிருக்கியா..?
எப்படியோ பிரியாணிக்கு ஒரு ஆட்டை உஷார் பண்ணியாச்சி...
தெரியாத்தனமா இந்த பக்கம் வந்துட்டேன். எனக்கு கண்ண கட்டுது...
செல்வா இன்னும் கதை சொல்லி முடிக்கலயா?
கதை முடிஞ்சுதா, ஆட்டுக்கும் நாய்க்கும் விட்யாசம் தெரியாத அப்பாவியா செல்வா ?
kalkkal nanpaaaaaaa
Ha ha ha..
Selva tommy vangi vantha udane.. micha kathaiya padikama nera mudivukku vanthu parthutten.. athan setharam konjam kammi..
:-)
Post a Comment