அப்போது செல்வா இன்னும் பள்ளிக்குச் செல்லவில்லை.
செல்வாவும் அவரது தாயாரும் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தனர்.
அங்கே அழகழகான பூச்செடிகள் நிறைய இருந்தன. அவற்றைப் பார்த்த நம் செல்வாவிற்கு தனது வீட்டிலும் அதே போல பூச்செடிகள் வைக்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
அங்கிருந்து சில சிறிய பூச்செடிகளை ஒரு காகிதத்தில் போட்டு வீட்டிற்கு எடுத்துவந்து ஒரு பூந்தொட்டியில் வைத்து வளர்க்க ஆரம்பித்தார்.
தினம் தினம் அந்தப் பூச்செடிகள் வளர்ந்துவிட்டனவா என்று பார்ப்பதும் அதற்குத் தண்ணீர் ஊற்றுவதுமாக நாட்கள் நகர்ந்தன. அது மட்டும் இல்லாமல் அதற்கு என்ன பேர் வைப்பது, அது சாப்பிடுமா ? என்றெல்லாம் வீட்டில் இருப்பவர்களிடம் கேள்விகளைக் கேட்டு நச்சரித்துகொண்டிருந்தார்.
” பூச்செடினா எதுவுமே சாப்பிடாது. அதுக்கு வாய் இல்லைல. அதுக்குத் தண்ணி மட்டும் ஊத்தினா போதும்” என்று அவரது சகோதரர் பதில் சொன்னார்.
செல்வாவும் தினமும் தண்ணீர் ஊற்றி வந்தார். ஆனால் இரண்டொரு நாட்களில் அந்தச் செடி வாட ஆரம்பித்திருந்தது.
எதேச்சையாக அந்தச் செடியைப் பார்த்த அவரது தாயார் “ ஏன்டா, செடிக்குத் தண்ணியே ஊத்துறது இல்லையா ? வாடிப்போச்சு பாரு! “
” இல்ல ஊத்திட்டுத்தான் இருக்கேன். இருங்க இன்னும் கொஞ்சம் ஊத்தலாம்!” என்று கூறிக்கொண்டு ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்து வந்து அதன் இலைகளைப் பிடித்து லேசாக தண்ணீருக்குள் மூழ்கச் செய்தார். ( செல்வாவைப் பொறுத்தவரை அது ஒரு விலங்கைப் போல வாய் வழியாகத் தண்ணீர் குடிக்கும் என்று நினைத்துக்கொண்டு அதன் இலைகளை அவ்வாறு தண்ணீரில் அமுக்கினார்).
“ டேய் டேய், என்ன பண்ற ? ”
” செடிக்குத் தண்ணி காட்டுறேன்! “
“ இப்படி எதுக்குக் காட்டுற ? “
” நம்ம நாய்க்கு இப்படித்தானே ஒரு பிளேட்ல தண்ணி வைக்கிறோம், அது மாதிரி இதுவும் குடிச்சிக்கும்ல ? “
“ ஐயோ! அப்படியெல்லாம் இது தண்ணி குடிக்காது. சும்மா மேல ஊத்திவிடு! “
“ தண்ணிய அது மேல ஊத்தினா அதுக்கு சளி பிடிச்சிக்காதா ? “ மீண்டும் குழப்பத்துடன் கேட்டார் செல்வா.
“ செடிக்கெல்லாம் எங்கடா சளி பிடிக்குது, புதுசு புதுசா யோசிக்கிறியே! “ என்று கொஞ்சலாகத் தூக்கி செடி வளரும் விதங்களைப் பற்றியும் அது வேர் வழியே தண்ணீர் உறிஞ்சும் என்றும் விளக்கிக் கூறினார்.
பின் சில நாட்கள் கடந்தன. செடிகள் முன்பு இருந்ததை விட வாடியிருந்தன.
செல்வாவை அழைத்த அவரது தாயார் “ ஏன்டா செடி மறுபடியும் வாடிருக்கு ? தண்ணி ஊத்துறது இல்லையா ?“ என்றார்.
“ இல்லம்மா, தினமும் தண்ணி ஊத்திட்டுத்தான் இருக்கேன். ஆனா வாடுது! “ என்றார் சோகமாக.
” எப்படி ஊத்துற ? இப்ப ஒரு தடவ ஊத்து!“
குடுகுடுவென வீட்டிற்குள் ஓடி வழக்கம்போலவே ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்துவந்து, பூந்தொட்டியில் இருந்த ஒரு செடியைப் பிடுங்கி, அதன் வேரில் தண்ணீரை ஊற்றிவிட்டு மீண்டும் இருந்த இடத்திலேயே நட்டுவிட்டு “ செடிய சுத்தியும் தண்ணி ஊத்தினா அதோட வேருக்குப் போய்ச் சேர நேரமாகும்ல, அதான் நானே வேர்ல தண்ணி ஊத்தினேன்! “ என்றார் செல்வா.
19 comments:
where is வேர்?
nice
நீங்க செய்த முறை கரெக்ட் தானே, அப்புறம் ஏன் செடி வாடிற்று!
Val....:D
Selva thappu pannittor..
Plant-a thannila
muzhgi vachirukkalam...
சூப்பர் செல்வா ............
keep komalingzzzzzzzzz ...... he he
// அப்போது செல்வா இன்னும் பள்ளிக்குச் செல்லவில்லை //
இப்ப மட்டும் என்ன வாழுதாம் ?
//where is வேர்? //
softWARE
hardWARE
புதுசு புதுசா யோசிக்கிறியே!!!
வாழ்க்கையை இப்படித்தான் பலரும் வாழ்கிறார்கள், வாழத் தெரியாமல். அழகாக எழுதியுள்ளிர்கள்!
amas32
//அப்போது செல்வா இன்னும் பள்ளிக்குச் செல்லவில்லை.//
அப்ப இப்போ போறாரா ?
இன்று என் வலையில்
கடுப்பேத்துரார் மை லார்ட் -பகுதி 2
//“ செடிய சுத்தியும் தண்ணி ஊத்தினா அதோட வேருக்குப் போய்ச் சேர நேரமாகும்ல, அதான் நானே வேர்ல தண்ணி ஊத்தினேன்! “ என்றார் செல்வா.//
india no 1 scientist
//trichy royal ranger said...
சூப்பர் செல்வா ............
keep komalingzzzzzzzzz ...... he he
////
புதுப்புது வார்த்தைகள் கண்டுபுடிச்சி திட்டுராங்களே!
நானெல்லாம் இவர் சிஷ்யன் ஆகிடலாம்னு பார்க்கிறேன் குருவே இது போல் பல யோசனைகளை எனக்கும் கூறினால் என்னுடைய வாழ்கையும் சிறப்பாக இருக்கும்
அடடா அந்த செடி ஐ பிடுங்கி , தண்ணி பைப் கு அடியில் நட்டிருந்தால் , வாடாமல் வளர்ந்திருக்குமோ ???
//பூந்தொட்டியில் இருந்த ஒரு செடியைப் பிடுங்கி, அதன் வேரில் தண்ணீரை ஊற்றிவிட்டு மீண்டும் இருந்த இடத்திலேயே நட்டுவிட்டு “ செடிய சுத்தியும் தண்ணி ஊத்தினா அதோட வேருக்குப் போய்ச் சேர நேரமாகும்ல, அதான் நானே வேர்ல தண்ணி ஊத்தினேன்! “//
அப்படியே நானும் செய்து பார்க்கிறேன் தலைவா
பு... புத்...புத்தி.... புத்திசா..... புத்திசாலி..... புத்திசாலி....
சாப்ட் வேரா? ஹார்டு வேரா?
Post a Comment