Saturday, October 8, 2011

மிமிக்ரி

இது செல்வா பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி.

அந்த வருடம் பள்ளியில் ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் விமரிசையாக ஏற்பாடாகிக்கொண்டிருந்தன.

பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என அனைத்து வகுப்பிலும் மாணவர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.

போட்டியில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் ஒரு நாளுக்கு ஒரு போட்டி மட்டுமே நடத்தப்பட்டது.

செல்வாவின் வகுப்பு மாணவர்களுக்கு சதுரங்கம் மற்றும் மிமிக்ரி செய்யும் போட்டிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தன. செல்வாவும் இரண்டு போட்டிகளிலும் பங்கெடுக்க விரும்புவதாகக் கூறியிருந்தார்.

முதலில் சதுரங்கப் போட்டி நடைபெற்றது. உண்மையில் செல்வாவிற்கு சதுரங்கம் என்றால் என்னவென்றே தெரியாது. அது ஒருவகையான தாயக்கட்டை விளையாட்டு என்றே நினைத்திருந்தார். விளையாட்டிற்குச் சென்ற பின்னர்தான் அது வேறுவிதமான விளையாட்டு என்பதைப் புரிந்துகொண்டார். 

சிறிது நேரம் சமாளிக்க முயன்று தோற்றுப்போனார். இறுதியில் தனக்கு இந்த விளையாட்டு தெரியாதென ஒப்புக்கொண்டார். வெளியில் செல்வாவின் வகுப்புத் தோழர்கள் அவரைப் பலவாறு கிண்டல் செய்யத் தொடங்கினர். செல்வாவிற்குப் பெருத்த அவமானமாகிப் போய்விட்டது. அடுத்த போட்டியில் எப்படியேனும் வெற்றிபெற்றே ஆகவேண்டும் எனத் தீர்மானம் செய்துகொண்டார்.

அன்று இரவு முழுவதும் தனியாக உட்கார்ந்து மிமிக்ரி செய்ய ஆரம்பித்தார். ஆனால் ஒரு குரலைக் கூடச் சரியாக மிமிக்ரி செய்ய முடியவில்லை. செல்வாவிற்கு பயம் அதிகரித்தது. ஒருவேளை இந்தப் போட்டியிலும் தோற்றுப்போனால் நண்பர்களின் கிண்டலைத் தாங்கிக்கொள்ள முடியாதே என்று கவலைப்பட்டார்.

அடுத்த நாள் மிமிக்ரி செய்யும் போட்டியின் விதிமுறைகளில் மிமிக்ரி செய்யும்போது யாரையேனும் துணைக்கு அழைத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதைப் படித்ததும் செல்வாவிற்கு ரவியைத் துணைக்கு அழைத்துவந்தால் எப்படியும் இந்தப் போட்டியில் வென்றுவிடலாம் என்பதால் ரவியின் பெயரை உதவிக்கு என்பதில் சேர்த்துக்கொண்டார்.

போட்டிக்கான நாளும் வந்தது. கையில் ஒரு பூனையுடன் மிமிக்ரி செய்யும் மேடைக்குச் சென்றார் செல்வா. அங்கிருந்த நடுவர் ஆச்சர்யத்துடன் “ பூனை எதற்கு? “ என்றார்.

“ இது பேரு ரவிங்க சார், எனக்கு உதவிக்கு!,கார்டுல எழுதிருக்கும் பாருங்க “

“ சரி என்ன மாதிரி மிமிக்ரி செய்யப் போற ? “

” சாப்பாடு போட்டா பூனை எப்படி கத்தும், அடிச்சா எப்படி கத்தும்? இந்த ரண்டும் நான் செய்யப் போறேன் சார்”

“ வெரி குட், அப்புறம் பூனை எப்படி ஹெல்ப் பண்ணப் போகுது ? ”

” சாப்பாடு போடுறது , அடிக்கிறதெல்லாம் நான் பண்ணப்போறென் சார், கத்துற ஹெல்ப் மட்டும் அது பண்ணும்! “ என்றார்.


19 comments:

Giri Ramasubramanian said...

நல்ல சமாளிப்பு!

TERROR-PANDIYAN(VAS) said...

:)

பெசொவி said...

Nice story!

(Template comment poduvor sangam)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மியாவ்......

மாலுமி said...

he he he he he he
ha ha ha ha ha ha
he he he he he he
ha ha ha ha ha ha
he he he he he he
ha ha ha ha ha ha
he he he he he he
ha ha ha ha ha ha
he he he he he he
ha ha ha ha ha ha

வெளங்காதவன்™ said...

அடிங்.........

Unknown said...

:)

வெளங்காதவன்™ said...

//TERROR-PANDIYAN(VAS) said...

:)

October 8, 2011 3:18 PM////

டெரர் இன்னும் உயிரோடு இருக்கிறாரா?

பன்னி சார். யூ டோல்ட் மீ தெட் டெரர் பாஸ்டு அவே. வொய் பிராப்ளம்?

#கோத்து வுட்டாச்சு..... ஜருகண்டி....

நாய் நக்ஸ் said...

Lol....lol...

MANO நாஞ்சில் மனோ said...

உருப்படுமா இல்ல உருப்ப்படுமான்னு கேக்குறேன்...?

Madhavan Srinivasagopalan said...

ஆமாம், கீ போர்டுல தண்ணி ஊத்தினா, கீ போர்டு வீணாப் போயிடும்..
---- சம்பந்தமில்லாமல் பேசுவோர் சங்கம்..

rajamelaiyur said...

ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...ஹீ ...

Prabu Krishna said...

ஹா ஹா நல்லவேளை எருமமாட்ட கூப்பிடாம விட்டீங்க அண்ணே.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஹா ஹா நல்லவேளை எருமமாட்ட கூப்பிடாம விட்டீங்க அண்ணே.//

ரெண்டு எருமை மாடை அலவ் பண்ண மாட்டாங்களாம்

சு. திருநாவுக்கரசு said...

”வேணாம்! வேணாம்!! விட்டுடுங்க!!!கொலைக்கேஸ்’லே மாட்டிப்பீங்க! இந்த கருநாக்கு செத்திடுவான்! ஆமா!”

nallavan said...

good one, but i have doubt whether it is your thinking or u took from any book? hey sorry, it is doubt only not discouraging.

செல்வா said...

// nallavan said...
good one, but i have doubt whether it is your thinking or u took from any book? hey sorry, it is doubt only not discouraging.//

டிஸ்கரேஜ் பண்ணுறதாவெல்லாம் எடுத்துக்கலங்க. இதில் எழுதப்பட்டுள்ள எல்லா கதைகளும் எனது சொந்த கற்பனை மட்டுமே.

வேறு எங்கிருந்தும் எடுக்கப்பட்டவை அல்ல!

Unknown said...

super story ....... மியாவ்

Riyas said...

Nice,,