Wednesday, June 29, 2011

எதை விதைக்கிறீர்கள்?


செல்வாவின் வீட்டிற்கு உறவினர் ஒருவர் வந்திருந்தார்.

வழக்கமான உபசரிப்புகள் முடிந்ததும் குடும்ப விசயங்களைப் பேசத்தொடங்கினர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த உறவினர் தங்கள் தோட்டத்தில் மிளகாய் நல்ல மகசூல் கொடுத்திருப்பதாகவும் அதை விற்பதற்கு ஏதேனும் வழி சொல்லுமாறும் கேட்டுக்கொண்டார்.

" நிச்சயமாக உதவுகிறோம்" என்று செல்வாவின் தந்தை உறுதியளித்தார்.

உள்ளூரில் இருந்த சிலரிடம் விசாரித்த செல்வாவின் தந்தை அனைவருமே வேகவைத்த மிளகாயே விரும்புவதைத் தெரிந்துகொண்டார்.

அடுத்தவாரம் வீட்டிற்கு வந்த அவரது உறவினரிடம் பச்சை மிளகாயை அதிக அளவில் யாரும் விரும்பமாட்டார்கள் என்றும் வேகவைத்துக் காயவைத்த மிளகாயையே அனைவரும் விரும்புகின்றனர் என்பதையும் எடுத்துக்கூறினார்.

இதைக்கேட்ட உறவினர் தங்கள் தோட்டத்தில் அதிக அளவு மிளகாய் விளைவதாகவும் ஒரே நேரத்தில் வேகவைப்பது சிரமம் என்றும் கவலைப்பட்டார்.

இதனை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்த நமது செல்வாவிற்கு " என்ன விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள்" என்ற பொன்மொழி ஞாபகம் வந்தது.

உடனடியாக அந்த உறவினரிடம் ஓடிய செல்வா " மாமா , உங்களுக்கு மிளகாய வேகவைக்கிறதுக்கு சிரமமா இருந்தா அத விதைக்கறதுக்கு முன்னமே அந்த விதைய வேகவச்சுடுங்க. வேக வச்ச விதைல இருந்து வேக வச்ச மிளகாய்தானே வரும்! " என்றார்.

12 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிறந்தநாள்ன்னு மன்னிச்சு விடுறேன்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வாழ்க.. வாழ்க..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிறந்தநாள்ன்னு மன்னிச்சு விடுறேன்///////

யாருடைய பிறந்த நாளுங்க...
யாராக இருந்தாலும் என் வாழ்த்துக்கள்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ மிளகா பஜ்ஜி, மிளகா வத்தல் வேணும்னா என்ன பண்ணனும்?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////
பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ மிளகா பஜ்ஜி, மிளகா வத்தல் வேணும்னா என்ன பண்ணனும்?/////


எங்காவது சுட்டு வச்சிருந்தா அப்படியே சுட்டுக்கிட்டு வந்துடனும்...

வைகை said...

உன் மூளைய கொண்டுபோய் எதுல வேக வைக்கிறது?

MANO நாஞ்சில் மனோ said...

உடனடியாக அந்த உறவினரிடம் ஓடிய செல்வா " மாமா , உங்களுக்கு மிளகாய வேகவைக்கிறதுக்கு சிரமமா இருந்தா அத விதைக்கறதுக்கு முன்னமே அந்த விதைய வேகவச்சுடுங்க. வேக வச்ச வயதில இருந்து வேக வச்ச மிளகாய்தானே வரும்! " என்றார்.//

அடிங் எட்றா அந்த அருவாளை......

MANO நாஞ்சில் மனோ said...

உருப்படவே மாட்டியா நீ......???

MANO நாஞ்சில் மனோ said...

உன்னை எப்பிடி திருத்த மக்கா மண்டை காயுதே அவ்வ்வ்வ்வ்வ்....

உணவு உலகம் said...

//# கவிதை வீதி # சௌந்தர் said...
//////
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பிறந்தநாள்ன்னு மன்னிச்சு விடுறேன்///////
யாருடைய பிறந்த நாளுங்க...
யாராக இருந்தாலும் என் வாழ்த்துக்கள்..//
செல்வாவிற்குத்தான் இன்று பிறந்த நாள். வாழ்த்தலாம் வாங்க!

karthikkumar said...

பிறந்தநாள்ன்னு மன்னிச்சு விடுறேன்..//
@ ramesh
நீங்க விட்டாலும் செல்வா விடமாட்டான்ல .. :)

Madhavan Srinivasagopalan said...

மிளகாய வேகவச்சி..
அத நட்டு..
அறுவடை பண்ணி.. (நோ.. நோ.. நாட் பன்னி)
வியாபாரம் பண்ணி.. ( ஒன்ஸ் அகைன் நாட் பன்னி)
பணமாக்குரதுக்கு பதிலா..

பணத்தையே நட்டு வெச்சா.. என்ன ?