Tuesday, June 21, 2011

ரயில்வேயும் செல்வாவும்!


இது செல்வா ரயில்வே அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது நிகழ்ந்தது.

செல்வா ரயில்வே அதிகாரியாகப் பொறுப்பேற்று ஒரு நிலையத்தின் நிலைய அதிகாரியாகப் பொறுப்பேற்றிருந்தார்.

புதிய சிந்தனையுடைய நமது செல்வா அநேக மாறுதல்களைக் கொண்டுவந்தார். சில நாட்களிலேயே மக்களின் பாராட்டுக்களைப் பெற்றார். மேலும் உயரதிகாரிகளும் செல்வாவைப் பாராட்டத் தொடங்கினர்.

ஆனால் இந்தப் பாராட்டுக்கள் எல்லாம் "EMERGENCY EXIT " என்று எழுதப்பட்ட இடத்தில் ஒரு மாறுதல் கொண்டுவரும் வரையே நீடித்தது.

ஒருநாள் "EMERGENCY EXIT" என்ற இடத்தில் கம்பிகள் பொருத்தப்பட்ட ஜன்னலைக் கொண்டு அடைத்துக்கொண்டிருந்தார்.

அப்பொழுது அங்கு வந்த உயரதிகாரி ஒருவர் எதற்காக இதனை அடைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார்.

" சார் , எமர்ஜென்சி எக்சிட் அப்படிங்கிறது எதாச்சும் பிரச்சினைனா தானே வேணும் , எல்லா நேரத்திலும் எதுக்கு இருக்கணும் ? அதான் அடைக்கிறேன்! எப்பவாச்சும் எதாச்சும் பிரச்சினைனா நாம அந்த நேரத்துல இந்த ஜன்னல எடுத்திட்டு பழையபடி ஓட்டையா மாத்திடலாம்ல! " என்று தனது திட்டத்தைச் சொன்னார் செல்வா.

சற்றே அதிர்ச்சியாக செல்வாவைப் பார்த்த அந்த அதிகாரி செல்வா போன்ற அறிவாளிகளை வெறும் ரயில்வே துறையில் வைத்து அவரது அறிவினை வீணாக்க விரும்பாமல் உடனடியாக அவரை வேலையில் இருந்து நீக்கினார்.

29 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரயில்ன்னா விமானம்தான?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அங்கயும் வேலை போச்சா?

செல்வா said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ரயில்ன்னா விமானம்தான?

//

இல்லனா தண்ணில போகும்ல அது தான் ரயில் !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது ரயில்வேயா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ரயில்ன்னா விமானம்தான?
///////

அப்போ விமானம்னா ரயிலா?

செல்வா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அங்கயும் வேலை போச்சா?
//

உங்க கூட சேர்ந்தா அப்புறம் என்னாகும் ?

வைகை said...

கோமாளி செல்வா said...
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ரயில்ன்னா விமானம்தான?

//

இல்லனா தண்ணில போகும்ல அது தான் ரயில் !//

நம்ம மாலுமிதான் தண்ணில போவான்?

செல்வா said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ரயில்ன்னா விமானம்தான?
///////

அப்போ விமானம்னா ரயிலா?

//

இல்ல கப்பல்னாதான் ரயில் , ரயில்னா விமானம் , விமானம்னா கப்பல்

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ரயில்ன்னா விமானம்தான?//

இந்த லட்சனத்துல இது கணித மேதையாம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கோமாளி செல்வா said...
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ரயில்ன்னா விமானம்தான?

//

இல்லனா தண்ணில போகும்ல அது தான் ரயில் !
///////

ஓ தண்ணில வேற போகுமா? அப்போ டீசல் ஊத்த வேணாம், சும்மா பீரு, விஸ்கின்னு ஊத்துனா போதும்?

வைகை said...

கோமாளி செல்வா said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ரயில்ன்னா விமானம்தான?
///////

அப்போ விமானம்னா ரயிலா?

//

இல்ல கப்பல்னாதான் ரயில் , ரயில்னா விமானம் , விமானம்னா கப்பல்//

அப்ப பஸ்நா என்ன?

செல்வா said...

/ஓ தண்ணில வேற போகுமா? அப்போ டீசல் ஊத்த வேணாம், சும்மா பீரு, விஸ்கின்னு ஊத்துனா போதும்//

ஓ, போதுமே.. ஆனா டாஸ்மாக் லீசுக்கு எடுக்கணும்.. அப்பத்தான் ஒரு ரயில ஓட்ட முடியும் ..

செல்வா said...

//அப்ப பஸ்நா என்ன?//

பஸ் நா காரு னா :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ரயில்ன்னா விமானம்தான?//

இந்த லட்சனத்துல இது கணித மேதையாம்?////////

அப்படின்னா நல்லா கணக்கு பண்ணுவானா......?

செல்வா said...

//அப்படின்னா நல்லா கணக்கு பண்ணுவானா......? //

எதுக்கும் அவர்கிட்ட கேட்டுப்பாக்க்லாமா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வைகை said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ரயில்ன்னா விமானம்தான?//

இந்த லட்சனத்துல இது கணித மேதையாம்?////////

அப்படின்னா நல்லா கணக்கு பண்ணுவானா......?/////////

அப்போ வரலாறு, புவியியல்லாம் யாரு பண்றது?

செல்வா said...

//அப்போ வரலாறு, புவியியல்லாம் யாரு பண்றது? //

கெமிஸ்ட்ரி ?

Yoga.s.FR said...

ரயிலுன்னா,ஏரோப்பிளேன்!!!!!!!!

செல்வா said...

//ரயிலுன்னா,ஏரோப்பிளேன்!!!!!!!! //

கிடையாதுங்க , ரயிலுணா கப்பல்தான் ..

karthikkumar said...

கார்த்தின்னா அறிவாளி மொக்கைன்னா செல்வா :)

Madhavan Srinivasagopalan said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரயில்ன்னா விமானம்தான? //

போலீசுக்கு மானமும் தெரியாது.. விமானமும் தெரியாது..

அருண் பிரசாத் said...

செல்வா,

இதை இப்படி மாத்தி இருக்கலாம்....

“எமர்ஜென்சிக்கு தான இந்த வழி, இதை அடைச்சிட்டா எமர்ஜென்சியே வராது இல்ல”

க.பாலாசி said...

ஹா..ஹா... நல்லாருக்குங்க செல்வா...

மாணவன் said...

அறிவாளி செல்வா வாழ்க... :)

NaSo said...

:-)

உணவு உலகம் said...

மொக்கைன்னா செல்வாதான்! :-)

MANO நாஞ்சில் மனோ said...

நண்பனை காண வந்த உறக்கத்தின் தானை தலைவனே டேய் நீ வாழ்க....நான் கிளம்புறேன்....

நிரூபன் said...

என்ன ஒரு டெரர் தனம்?
Emergency Exit என்றால்....
ஹி....ஹி...
ரசித்தேன், சிரித்தேன் மாப்ளே.

Madhavan Srinivasagopalan said...

// அருண் பிரசாத் said...

செல்வா,

இதை இப்படி மாத்தி இருக்கலாம்....

“எமர்ஜென்சிக்கு தான இந்த வழி, இதை அடைச்சிட்டா எமர்ஜென்சியே வராது இல்ல” //

Good one, Arun.