ஒரு முறை செல்வாவும் அவரது நண்பரும் சுற்றுலா செல்லலாமெனத் திட்டமிட்டிருந்தனர்.
சுற்றுலா செல்லலாம் என்று ஏற்கெனவே சொல்லியிருந்த நாளில் செல்வாவின் நண்பர் செல்வாவின் வருகைக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.
நீண்ட நேரம் கழித்து வந்த செல்வாவிடம் " ஏன்டா இவ்ளோ நேரம் ? ஒரு மனுஷன் எவ்ளோ நேரம்தான் வெயிட் பண்ணுறது ? "
" எங்க வீட்டுல இருந்து இங்க வரதுக்கு ஒரே ஒரு பஸ் தான் இருக்கு , அதுவும் போயிருச்சு! அதான் நடந்தே வரேன்! அதனால லேட் ஆகிருச்சு " என்றார் செல்வா.
" எரும , வர்ற வழில டூ வீலர்ல வர்ற யாரச்சும்கிட்ட லிப்ட் கேட்டு வரலாம்ல! "
" லிப்டுனா பெரிய கட்டடத்துல கீழ இருந்து மேல போறதுக்கு வச்சிருப்பாங்களே அதுதானே ? டூ வீலர்ல எப்படி அவ்ளோ பெரிய லிப்ட்ட எடுத்துட்டு வர முடியும்?" என்று தனது அறிவாளித்தனத்தை வெளிப்படுத்தினார்.
இதற்குமேல் பேசினால் வீண் விவாதங்கள் வரலாம் என்று மேற்கொண்டு பேசாமல் தாங்கள் ஏற்கெனவே பேசிவைத்திருந்த சுற்றுலாத் தளத்திற்கு விரைந்தனர்.
சுற்றுலா சென்ற இடத்தில் செல்வாவின் நண்பர் செல்வாவை தனியாக விட்டுவிட்டு அருகில் இருந்த கடைக்குச் சென்றிருந்தார். சிறிது நேரம் கழித்து வந்த அவரது நண்பர் செல்வாவும் வேறொருவரும் சண்டை போட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தார்.
" டேய் , ஏண்டா அவர் கூட சண்டை போடுற ? "
" அவன் என்ன சொன்னான்னு நீயே கேளு ! "
அருகில் இருந்த நபரிடம் " என்ன பிரச்சினைங்க ?" என்றார் செல்வாவின் நண்பர்.
இவர் என்ன கேட்டார் என்று புரியாத அந்த நபர் " I DON'T KNOW TAMIL " என்றார்.
செல்வாவிடம் திரும்பிய அவரது நண்பர் " டேய் லூசு , அவருக்கு தமிழ் தெரியாதாம்ல , அப்புறம் எதுக்கு அவர் கூட சண்டை போட்டுட்டு இருக்க ?"
" தமிழ் தெரியலைனா தமிழ் தெரியாதுன்னு சொல்லவேண்டியதுதானே ?! " என்று கோபமாகக் கேட்டார் செல்வா.
" தமிழ் தெரியாதுன்னு தான சொல்லுறாரு ? "
" தமிழ் தெரியாதுன்னு தமிழ்ல சொல்லவேண்டியதுதானே !? அப்பத்தான எனக்கு புரியும்! " என்ற செல்வாவைப்பார்த்து தலையில் அடித்துக்கொண்டு " வா போலாம்! " என்று அழைத்துச்சென்றார்.
14 comments:
தமிழா தமிழா நாளை உன் நாளே
தமிழன் எட்ன்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
செம்மொழியான தமிழ்மொழியாம்.
தமிழறிஞர் செல்வா வாழ்க..!
தலை!! சரியான மொக்கை கதை
வாழ்க தமிழ்...
செம்மொழி செல்வா வளர்க...
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேலை உடுத்த தயங்குறியே
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேலை உடுத்த தயங்குறியே
நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையுறியே
கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே
(செந்தமிழ்..)
எழந்த காட்டில் பொறந்தவ தானே லண்டன் மாடல் நடை எதுக்கு
காஞ்சிபுரங்கள் ஜொலிக்கின்ற போது காத்து வாங்கும் உடை எதுக்கு
உடம்பு வேர்க்கும் உஷ்ண நாட்டில் உரசி பேசும் ஸ்டைல் எதுக்கு
டக்கர் குங்குமம் மணக்கும் நாட்டில் ஸ்டிக்கர் பொட்டு உனக்கு எதுக்கு
(செந்தமிழ்..)
கற்பு என்பது பிற்போக்கு இல்ல கவசம் என்றே தெரிஞ்சிக்கணும்
காற்றில் மிதக்கும் கார்குழல் பின்னி கனக பூக்கள் அணிஞ்சிக்கணும்
பழமை வேறு மழசு வேறு வேறுப்பாடை அறிஞ்சிக்கணும்
புரட்சி எங்கே மலர்ச்சி எங்கே புரிஞ்சு நீயும் நடந்துக்கணும்
(செந்தமிழ்..)
செல்வா’வுக்கு இங்கிலீசு தெரியாது’னு சொன்னதும் சிரிப்பு போலீஸுக்கு சந்தோசம் தாங்கலப்பா....
அதான.. தமிழ் தெரியலேன்ன.. அந்தாளு மொதல்ல
'எனக்கு தமிழ் தெரியாது' னு சொல்லவாவது கத்துக் கிட்டு இருக்கணும்..
நான் நார்த் இந்தியா போனப்ப.. மொதல்ல கத்துக் கிட்ட வாக்கியம் "முஜே ஹிந்தி நஹி மாலும்" (எனக்கு ஹிந்தி தெரியாது)
ஆந்திரா போன புதுசுல கத்துக் கிட்டது " நாக்கு தெலுகு ராது / தெளியது " (எனக்கு தெலுகு வராது / தெரியாது )
இது கொடைக்கானல்ல நடந்ததா?
என்னப்பா இது தமிழுக்கு வந்த சோதனை!!??
I can talk english
I can walk english
selva rocks!!!!!!!!
Post a Comment