செல்வாவின் ஊர் அன்று பரபரப்பாக இருந்தது. ஆம் நிலவுக்கு ஆட்களை அனுப்பும் இந்தியாவின் முயற்சி வெற்றி பெற்று அதன் பிறகு நடந்த தேர்தலில் அறிவிக்கப்பட்ட இலவசத்திட்டத்தின் பயனாக ஒவ்வொரு ஊரிலிருந்தும் ஐந்து பேரை நிலவுக்கு இலவசமாக அழைத்துச் செல்லும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுக் கொண்டிருந்தது!
அந்த வகையில் செல்வாவின் ஊரில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் செல்வாவும் ஒருவர்.
மொத்தம் ஐந்து நபர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவதால் ஒவ்வொருவராக அவர்களின் உடல் நலம் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நிலவுக்குச் செல்லும் பயணம் பற்றிய முக்கியக் குறிப்புகளை விஞ்ஞானிகள் கூறிக்கொண்டிருந்தனர்.
பின்னர் நிலவுக்குச் செல்லும் நாளும் வந்தது. செல்வாவும் அவசர அவசரமாக கிளம்பிக்கொண்டிருந்தார். ஆனால் செல்வா வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்று சொன்னதால் ஏவுதளம் செல்லும் வாகனம் செல்வாவை மட்டும் விட்டுவிட்டுச் சென்றுவிட்டது.
சிறிது நேரம் கழித்து அவரது நண்பருக்குப் போன் செய்து செல்வா சொன்னதைக் கேட்டுவிட்டு அவரது ஊரே செல்வாவைப் பார்த்துச் சிரித்துகொண்டிருந்தது.
அப்படி அவர் என்னதான் சொன்னார்?
அவர் சொன்னது “ மச்சி, ஜன்னலோரமா ஒரு சீட் போட்டு வைடா, புளிச்சோறு கட்டிட்டு வந்திடறேன்! “ சீக்கிரமா வந்திடரேன்!
34 comments:
பின்னே சிரிக்காம? நிலாவுக்கு போறீங்க பால்சோறுல்ல கட்டிகிட்டு போகனும்!
மச்சி, ஜன்னலோரமா ஒரு சீட் போட்டு வைடா, புளிச்சோறு கட்டிட்டு வந்திடறேன்//
ஒழுங்கா அங்க போயிருந்தா பாட்டிகிட்ட வடை வாங்கியிருக்கலாம்?
// எஸ்.கே said...
பின்னே சிரிக்காம? நிலாவுக்கு போறீங்க பால்சோறுல்ல கட்டிகிட்டு போகனும்//
ஓ, அதுக்குத்தான் சிரிச்சாங்களா ?
செம்ம கிளைமாக்ஸ் ..............சிரிப்பு தாங்கல
பால் எதுக்கு எஸ்.கே..?
சோறு மட்டும் கட்டிக்கிட்டு போனா போரும்..
பால்தான் நிலவுல இருக்கே..
//
ஒழுங்கா அங்க போயிருந்தா பாட்டிகிட்ட வடை வாங்கியிருக்கலாம்?//
அவுங்க இன்னுமா வடை சுடுறாங்க ?
// royal ranger said...
செம்ம கிளைமாக்ஸ் ..............சிரிப்பு தாங்கல
//
ரொம்ப நன்றிங்க :-)
// Madhavan Srinivasagopalan said...
பால் எதுக்கு எஸ்.கே..?
சோறு மட்டும் கட்டிக்கிட்டு போனா போரும்..
பால்தான் நிலவுல இருக்கே..
//
அங்க யாரு பால் விக்குறாங்க, அண்ணாமலையா ?
// கோமாளி செல்வா said...
// Madhavan Srinivasagopalan said...
பால் எதுக்கு எஸ்.கே..?
சோறு மட்டும் கட்டிக்கிட்டு போனா போரும்..
பால்தான் நிலவுல இருக்கே..
//
அங்க யாரு பால் விக்குறாங்க, அண்ணாமலையா ? //
அண்ணாமலை.. -- அதுலாம் ஓல்டு..
இப்ப பால் விக்கிறது.. ரோபோ.. சீக்கிரம் போங்க..
இல்லேன்னா... 'ரானா' வந்தாலும் வந்திடுவாரு..
பாட்டிய மிஸ் பண்ணிட்டியே
//கோமாளி செல்வா said...
//
ஒழுங்கா அங்க போயிருந்தா பாட்டிகிட்ட வடை வாங்கியிருக்கலாம்?//
அவுங்க இன்னுமா வடை சுடுறாங்க ? //
வடை சுடும் (வினைத்தொகை) பாட்டி..
பாட்டி இன்னும் வடைய சுடுறாங்க..
இன்னமும் சுடுவாங்க..
ஆனா சைடுடிஸ்
நிலாவில் வாங்கிக்கலாம்..
அங்கத்தான் பாட்டி வடை சுடுறாங்களே....
எப்பூடி...
புளிசோறு புளிச்சிடாதா?
புளிசோத்துக்குள்ள முட்டைய வெச்சுக்கிட்டு போ, எல்லாரும் பிரியாணின்னு நெனச்சுடுவாங்க......
//அண்ணாமலை.. -- அதுலாம் ஓல்டு..
இப்ப பால் விக்கிறது.. ரோபோ.. சீக்கிரம் போங்க..
இல்லேன்னா... 'ரானா' வந்தாலும் வந்திடுவாரு.//
ரோபோ படல் அங்கயும் எடுத்திருக்காங்களானா ?
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பாட்டிய மிஸ் பண்ணிட்டியே
//
எந்த பாட்டி ?
//
# கவிதை வீதி # சௌந்தர் said...
ஆனா சைடுடிஸ்
நிலாவில் வாங்கிக்கலாம்..
அங்கத்தான் பாட்டி வடை சுடுறாங்களே....
எப்பூடி...
//
ஆனா எனக்கு வடை பிடிக்காதே :-)
/// FOOD said...
என்னா மூளைய்யா செல்வாவுக்கு!//
அதான் பாருங்க சார் :-)
//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
புளிசோத்துக்குள்ள முட்டைய வெச்சுக்கிட்டு போ, எல்லாரும் பிரியாணின்னு நெனச்சுடுவாங்க....//
நீங்க வரலியா ?
செல்வா உங்க நணபர்கிட்ட சொல்லி எனக்கு உங்க பக்கத்துல ஒரு சீட் போட சொல்லுங்க, நானும் வரேன்,
//
அருமையான நகைச்சுவை கதை செல்வாவுக்கு நிகர் செல்வாதான்
//அருமையான நகைச்சுவை கதை செல்வாவுக்கு நிகர் செல்வாதான்/
ரொம்ப ரொம்ப நன்றிங்க :-)
நிலாவுக்கு மொக்கையா
// பலே பிரபு said...
நிலாவுக்கு மொக்கையா
//
நிலாவ மட்டும் எதுக்கு விட்டு வைக்கனும் ?
டேய் தம்பி, அண்ணனுக்கு சீட் கூட வேண்டாம்ப்பா நான் கம்பியை பிடிச்சுட்டே வாரேன் நோ பிராப்ளம் ஹி ஹி....
ஐயய்யோ கிளம்பிட்டானே......!!!
உங்கள் பொன்னான பணி தொடரட்டும்.
//அந்த வகையில் செல்வாவின் ஊரில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் செல்வாவும் ஒருவர்.//
அச்சச்சோ....செல்வா நிலவுக்குப் போறாரா? அப்போ எனக்கு யாரு மொக்க கதைசொல்லி தூங்க வைப்பாங்க....அழுகாச்சி அழுகாச்சியா வருது எனக்கு.
ஹா ஹா சிரிச்சேன்யா
தமிழ்வாசியில் இன்று:
அட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - இரண்டாம் பாகம்!
டேய் தம்பி, அண்ணனுக்கு சீட் கூட வேண்டாம்ப்பா நான் கம்பியை பிடிச்சுட்டே வாரேன் //
athelam mudiayathu neenga nikkumpothu tambi ukkanthukitu varatha???
...செல்வா நிலவுக்குப் போறாரா? அப்போ எனக்கு யாரு மொக்க கதைசொல்லி தூங்க வைப்பாங்க....அழுகாச்சி அழுகாச்சியா வருது எனக்கு//
நோ நோ அழகூடாது அக்கா ,எங்கள் அண்ணா செல்வா மீண்டும் உங்களுக்க்க ஒரு கதை சொல்லுவர் நீங்கள் தூங்கலாம்
தானே தலைவன்
அஞ்ச நெஞ்சன்
எங்கள் கதை மன்னன் செல்வா வாழ்க வாழ்க
இப்படிக்கு
செல்வா ரசிகர் மன்றம் kilai en 138.
பதிவர்களுக்காக- பதிவரால்- பதிவர் தென்றல் மாத இதழ். மேலும் விவரங்களுக்கு என் வலைத்தளம் வருக...
என்னது ராக்கெட்டுல ஜன்னல் சீட்டு கிடையாதா??
Post a Comment