Saturday, July 9, 2011

செல்வாவின் அறிவுத்திறன்!

செல்வாவும் அவரது நண்பரும் வேலை நிமித்தமாக வெளியூரில் தங்கியிருந்தார்கள்.

செல்வாவின் அறிவாளித்தனத்தைச்(!?) சமாளித்து அவருடன் இருப்பதற்கு அவரது நண்பர் மிக மிகச் சிரமப்படவேண்டியிருந்ததது.

இப்படித்தான் ஒரு நாள் நள்ளிரவு இரண்டு மணி இருக்கும். நல்ல உறக்கத்திலிருந்த அவரது நண்பருக்கு யாரோ “ புஸ் புஸ்” என்று ஊதுவது போல சத்தம் கேட்டது. விழித்துப்பார்த்தவருக்கு ஆச்சர்யம்.

பக்கத்தில் செல்வா ஒரு சைக்கிள் பம்பினை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு அதன் காற்றுக் குழாயில் வாயை வைத்து ஊதிக்கொண்டிருந்தார்.

அவரது நண்பருக்கு குழப்பத்திற்கு மேல் குழப்பம். அதுவும் இல்லாமல் அவர்களிடம் இது போன்ற பம்ப் ஏதும் இல்லை.

“ டேய், எதுக்குடா இப்ப இந்த பம்பல வாய வச்சு ஊதிட்டு இருக்க?” என்றார்.

“சத்தமா பேசாதடா, இது எதிர்த்த வீட்டுக்காரங்க பம்பு, நானே அவுங்களுக்குத் தெரியாம ஊதிட்டு இருக்கேன்! “ என்று மெதுவான குரலில் சொன்னார் செல்வா.

” சரி மெதுவாவே சொல்லு , இப்ப எதுக்கு இப்பிடி ஊதிட்டு இருக்க ?”

” காலைல நம்ம சைக்கிளுக்கு இந்த பம்ப்ல இருந்துதானே காத்து அடிச்சோம் , அதான் பம்புக்குள்ள இருக்குற எல்லா காத்தும் நாமலே எடுத்துட்டோம்ல. நாளைக்கு அவுங்க செக் பண்ணும்போது காத்து இல்லைனு நம்ம கிட்ட காசு கேட்டா என்ன பண்ணுறது? அதான் இப்பவே அவுங்களுக்குத் தெரியாம ஊதி வச்சிட்டா பிரச்சினை வராதுல! எப்டி ஐடியா?” என்று குசுகுசுவெனச் சொன்னார் செல்வா.

14 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அதெப்படி சைக்கிளுக்கு காத்தடிச்சிட்டு வாய்ல இருந்து ஊதிவெச்சா சரியா போகுமா? அதே காத்தைல திருப்பி வெக்கனும்?

செல்வா said...

அதான் அவுங்கள ஏமாத்தத்தானே வாய்ல ஊதி வக்கிறேன் :-)

முத்தரசு said...

இம்புட்டு அறிவாளியா?? பய புள்ள....விவரம்தான்

Madhavan Srinivasagopalan said...

கடேசில,. அந்த நண்பரு.. அழுதாரா. சிரிச்சாரா ?

செல்வா said...

// மனசாட்சி said...
இம்புட்டு அறிவாளியா?? பய புள்ள....விவரம்தான்
//

ஹி ஹி ஹி.. ஆமாங்க. வெளியில சொல்லிறாதீங்க!

செல்வா said...

//கடேசில,. அந்த நண்பரு.. அழுதாரா. சிரிச்சாரா ?//

என்ன பண்ணுறதுனு தெரியாம அப்படியே போயிட்டாரு!

குடந்தை அன்புமணி said...

:)

(நான்கூட அப்படியே போயிடலாம்னுதான் நினைச்சேன். ஆனா வந்துட்டு போனது தெரியாது பாருங்க... அதான் ஒரு ஸ்மைல் போட்டேன்...)

செல்வா said...

//
(நான்கூட அப்படியே போயிடலாம்னுதான் நினைச்சேன். ஆனா வந்துட்டு போனது தெரியாது பாருங்க... அதான் ஒரு ஸ்மைல் போட்டேன்...)//

;-)

ஹி ஹி ஹி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு...

Niroo said...

நான் கமெண்ட் போட மாட்டேன்

Mohamed Faaique said...

செல்வாவுடன் வெளியே செல்லும் நன்பர்கள் உருட்டுகட்டையை உடன் எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப் படுகிறீர்கள்...

நிரூபன் said...

அடிங் கொய்யாலா....

வெளியே எடுத்த காற்றை, ஊதினால் உள்ளே போயிடுமா..

ஹா...ஹா.. உட்கார்ந்து யோசிக்கிறீங்களோ.

அருமை பாஸ்.

Vadivel M said...

நல்ல வேளை,சைக்கிளுக்கு ஆயில் விடலை!