Friday, July 8, 2011

இதுவும் சரிதானே?

”ஏன்டா உங்கிட்ட ஒரு வேலையக் கொடுத்தா உருப்படியா பண்ணமாட்டியா?“ என்று திட்டியவாரே செல்வாவின் அறைக்குள் நுழைந்தார் அவரது தாயார்.

“ஏன் மா ?”

“உப்பு வாங்கிட்டு வரச்சொன்னா இதென்ன அழுக்கு உப்ப வாங்கிட்டு வந்திருக்க? இத வச்சு என்ன பண்ணுறது?”

“அது, அது, அது வந்து வாங்கிட்டு வரும்போது கீழ கொட்டிருச்சு, அதான் அப்படி அழுக்காகிருச்சு!” என்று பயந்தவாரே சொன்னார் செல்வா.

”இத்தன உப்பும் வேஸ்ட். கண்ணாடி காகிதத்துலதான போட்டு கொடுத்திருப்பாங்க, அது எப்படி கீழ கொட்டுச்சு?”

“அஞ்சு காலி கவர் கொடுத்தா ஒரு பாக்கட் உப்பு இலவசம்னு சொன்னாங்க, அதான் அஞ்சு பாக்கட் வாங்கி அதுல இருந்து உப்ப எல்லாத்தயும் கீழ கொட்டிட்டு அந்த காலி பாக்கட்ட கொடுத்து ஒரு பாக்கட் உப்பு இலவசமா வாங்கிட்டேன்! அதான் இப்டி அழுக்காகிருச்சுனு நினைக்கிறேன் மா! “

“இலவசப் பொருள வாங்குறதுக்கு இப்படி எல்லாம் பண்ணனுமா? இப்ப பாரு எல்லாமே வெட்டியாப் போச்சு!” என்று தலையில் அடித்துக்கொண்டு மீண்டும் உப்பு வாங்குவதற்காக கடைக்குச்சென்றார் அவரது தாயார்.

கடைக்குச் சென்று திரும்பிய அவரது தாயாருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

செல்வா அவர் வாங்கி வந்திருந்த உப்பினை ஒரு பக்கட்டில் தண்ணீர் ஊற்றி அதற்குள் கொட்டிவைத்திருந்தார்.

“இது எதுக்குடா இப்ப பக்கட்ல தண்ணி ஊத்தி வச்சுருக்க? “ 

“அதான் உப்பு அழுக்காகிப்போச்சுல. அத வாசிங்பவுடர் போட்டு அலாசிட்டோம்னா அழுக்கு போய்டும்ல அதான் பக்கட்ல ஊற வச்சிருக்கேன்” என்றார்.

21 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு...

எஸ்.கே said...

செல்வா கதைகளை படித்தால் உலக மக்களின் பாவங்கள் வாசிங்பவுடர் போட்டு கழுவப்படும்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

செய்யுங்கப்பா.. செய்யுங்க..
இன்னும் என்னன்ன இருக்கோ அத்தனையும் செய்யுங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

/////
எஸ்.கே said...

செல்வா கதைகளை படித்தால் உலக மக்களின் பாவங்கள் வாசிங்பவுடர் போட்டு கழுவப்படும்!///////

இப்ப கழுவுனாரே அதுமாதிரியா..

உணவு உலகம் said...

Rombathaan kazhuvaatheenga!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யாராவது வந்து இவன கழுவி கழுவி ஊத்துங்க.

TERROR-PANDIYAN(VAS) said...

@Ramesh

Y BLOOD? SAME BLOOD... :)

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்லா கழுவுங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கண்ணாடி காகிதம், அருமையான சொல்லாடல் செல்வா....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ அந்த உப்பு சுத்தமாகி கண்ணாடி மாதிரி ஆகி இருக்குமே?

Unknown said...

சரிதான்

வைகை said...

அழுக்கு போய்டும்ல அதான் பக்கட்ல ஊற வச்சிருக்கேன்” என்றார்.//

ஏன் அலசனும்? கறை நல்லதுதானே?

jroldmonk said...

ஹி... ஹி.. ,ஹா... ஹா..., ஹே... ஹே... , ஹோ... ஹோ...

செல்வா said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள். அதிக வேலைகள் இருப்பதால் என்னால் தனித்தனியாக பதில் சொல்ல முடியாததற்கு மன்னிக்கவும்:-)

எஸ்.கே said...

//பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள். அதிக வேலைகள் இருப்பதால் என்னால் தனித்தனியாக பதில் சொல்ல முடியாததற்கு மன்னிக்கவும்:-)//

அப்ப எல்லோரையும் மொத்தமா கைகழுவிட்டீங்க?:-))

வெங்கட் said...

// “அதான் உப்பு அழுக்காகிப்போச்சுல. அத வாசிங்பவுடர் போட்டு அலாசிட்டோம்னா அழுக்கு போய்டும்ல அதான் பக்கட்ல ஊற வச்சிருக்கேன்” என்றார். //

செல்வாவா.. கொக்கா..?! :)

Mohamed Faaique said...

முடியல....
///”ஏன்டா உங்கிட்ட ஒரு வேலையக் கொடுத்தா உருப்படியா பண்ணமாட்டியா?“///

இன்னுமா அம்மாவுக்கு இது தெரியல...???

மங்குனி அமைச்சர் said...

uppo washing mechinla pottaa auto metikkaa alukku poyidume??

மங்குனி அமைச்சர் said...

sari ippo uppula irukka alukkellaam thannikku vanthidume ....ippo yeppadi thanniya suththam pannurathu???

மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
கண்ணாடி காகிதம், அருமையான சொல்லாடல் செல்வா....!///

////அருமையான சொல்லாடல் ////

panni selvaava nee minjittiye