Wednesday, July 6, 2011

தண்ணீரில் நனைந்த மீன்!


இது செல்வாவின் குழந்தைப்பருவத்தில் நிகழ்ந்த சம்பவம்.

அன்று செல்வா தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார். தொலைக்காட்சியில் வந்த ஒரு காட்சியைப் பார்த்துக்கொண்டு பயந்தவர் வீட்டின் மூலையில் ஒரு கோணிப்பைக்கு அடியில் போய் ஒளிந்துகொண்டார்.

வெளியில் சென்றுவிட்டு வந்த அவரது தாயார் செல்வாவைக் காணாததால் தவித்துப்போய் சத்தமாகக் கத்திக் கூப்பிடத்தொடங்கினார். ஆனால் செல்வா வாயைத் திறக்கவே இல்லை.

சிறிது நேரம் கத்திய அவரது தாயார் "எங்க போய்த் தொலைஞ்சான்னு தெரிலையே?" என்று சலித்தவாறே வீட்டிற்குள் சென்றார்.

அங்கே ஒரு கோணிப்பையில் " இந்தக் கோணிப்பைக்குள் ஒன்றும் இல்லை!" என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தவர் அந்த கோணிப்பையை தூக்கினார்.

கோணிப்பையில் ஒளிந்திருந்த செல்வாவைப் பார்த்த அவரது தாயார் " இங்க ஏண்டா ஒளிஞ்சிட்டு இருக்க ? அந்தக் கத்துக் கத்தி கூப்பிட்டேன் வயத்தொறந்து சொல்லுறதுக்கு என்ன ? " என்றார் கோபமாக.

" என்னைய போலீஸ் பிடிக்க போகுது, அதான் ஒளிஞ்சிக்கிட்டேன்!" என்றார் செல்வா. இதைச்சொல்லும்போதே கை கால்களெல்லாம் தனித்தனியாக நடுங்கிக்கொண்டிருந்தது.

" எதுக்கு போலீஸ் பிடிக்குது ? " 

" டிவில ஒரு படத்துல ஒரு ஆளு இன்னொருத்தன தண்ணிக்குள்ள தள்ளிவிட்டு கொன்னுட்டான், அவன போலீஸ் பிடிச்சிட்டு போச்சு. அப்படின்னா என்னையும் பிடிக்கும்ல" என்றார் செல்வா.

" உன்ன எதுக்குடா பிடிக்குது?" குழப்பமாகக் கேட்டார் அவரது தாயார்.

" நேத்திக்கு அப்பா ஒரு மீன் வாங்கிட்டு வந்தார்ல, அத கொண்டுபோய் நான் தண்ணிக்குள்ள தள்ளி விட்டுட்டேன்! அப்படின்னா என்னையும் போலீஸ் பிடிக்கும்ல!" என்று அழ ஆரம்பித்தார்.

38 comments:

NaSo said...

இன்னைக்கு மாட்டினது மீனா?

வைகை said...

புடிக்கவர்ற போலீசையும் தண்ணிக்குள்ள தள்ளி விட்ரு.. இந்த போலிசுகளே இப்பிடித்தான் :))

வைகை said...

இந்தக் கோணிப்பைக்குள் ஒன்றும் இல்லை!" என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தவர் அந்த கோணிப்பையை தூக்கினார்.//

இப்பிடி எழுதியும் தூக்கிருக்காங்கன்னா...செல்வா அம்மாவுக்கு படிக்க தெரியாதோ?

Madhavan Srinivasagopalan said...

//" நேத்திக்கு அப்பா ஒரு மீன் வாங்கிட்டு வந்தார்ல... //

செத்த மீனா (மார்கெட்டு மீனு)
சாகாத மீனா (அக்வாரியம் மீனு) ?

செல்வா said...

//இன்னைக்கு மாட்டினது மீனா/

நான் வேற எழுத ஆரம்பிச்சேன் நா. ஆனா ரொம்ப பெரிசா போற மாதிரி தெரிஞசதால அப்படியே முடிச்சிட்டேன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மீன் செத்த கருவாடு
நீ செத்த வெறும்கூடு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுக்கே இப்படின்னா அப்போ மீன் சாப்புட்டா என்ன சொல்லுவாரு?

செல்வா said...

//புடிக்கவர்ற போலீசையும் தண்ணிக்குள்ள தள்ளி விட்ரு.. இந்த போலிசுகளே இப்பிடித்தான் :)//

ஆனா அது ரொம்ப சின்ன தொட்டி நா:-)

செல்வா said...

//மீன் செத்த கருவாடு
நீ செத்த வெறும்கூடு
//

இது யாரு சொன்னது ?

செல்வா said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதுக்கே இப்படின்னா அப்போ மீன் சாப்புட்டா என்ன சொல்லுவாரு?//

மீன் சாப்பிட்டா என்ன , சாப்பிடலைனா எனக்கு என்ன நா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// கோமாளி செல்வா said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதுக்கே இப்படின்னா அப்போ மீன் சாப்புட்டா என்ன சொல்லுவாரு?//

மீன் சாப்பிட்டா என்ன , சாப்பிடலைனா எனக்கு என்ன நா?
////////

அந்த மீன நீ சாப்புட்டா?

செல்வா said...

//அந்த மீன நீ சாப்புட்டா?
//

அய்யே நான் பச்ச மீன் சாப்பிடவே மாட்டேன். பொறிச்சு குடுத்தா மட்டும்தான் சாப்பிடுவேன்!

Unknown said...

ஐயோ ஐயோ

மங்குனி அமைச்சர் said...

என்னையும் போலீஸ் பிடிக்கும்ல!" என்று அழ ஆரம்பித்தார்.///

ஆமா , ஆமா ...... erodu ஸ்டேசன் மகளிர் எஸ்.ஐக்கு உன்ங்கள ரொம்ப பிடிக்குமாம்

செல்வா said...

// Arun Kumar said...
ஐயோ ஐயோ
/

சரி சரி.. அழாதீங்க!

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...
//அந்த மீன நீ சாப்புட்டா?
//

அய்யே நான் பச்ச மீன் சாப்பிடவே மாட்டேன். பொறிச்சு குடுத்தா மட்டும்தான் சாப்பிடுவேன்!
July 6, 2011 3:41 PM
Post a கமெண்ட்///



என்னது பச்ச மீனா ??? அந்த கலர்ல நான் மீன் எதுவும் பார்த்ததில்லையே

மங்குனி அமைச்சர் said...

சரி , சரி கடைசீல அந்த கோணிப்பைய என்ன பண்ணினாங்க ????

செல்வா said...

//ஆமா , ஆமா ...... erodu ஸ்டேசன் மகளிர் எஸ்.ஐக்கு உன்ங்கள ரொம்ப பிடிக்குமாம்
//

ஐயோ :-)

செல்வா said...

//என்னது பச்ச மீனா ??? அந்த கலர்ல நான் மீன் எதுவும் பார்த்ததில்லையே
//

அது கண்ணுக்குத் தெரியாது நா..

Riyas said...

சூப்பர்ர்

மாணவன் said...

he..he.. super selva...

இம்சைஅரசன் பாபு.. said...

டேய் ..டேய் ..உன்னை அந்த மீனுக்கு இறையாக ஒரு நாள் நான் போடுறேன் பாரு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////நாகராஜசோழன் MA said...
இன்னைக்கு மாட்டினது மீனா?
///////

மீனா இல்ல மச்சி, மீன்......!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

யூவர் அன்டர் அரஸ்ட்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அப்பவே சொன்னே இந்த பன்னிக்குட்டியை பிளாக் பக்கம் செர்க்காதேன்னு....

இப்ப பாரு...

செல்வா said...

// Riyas said...
சூப்பர்ர்
//

நன்றிங்க :-)

செல்வா said...

// மாணவன் said...
he..he.. super selva...//

ஹி ஹி ஹி

செல்வா said...

// இம்சைஅரசன் பாபு.. said...
டேய் ..டேய் ..உன்னை அந்த மீனுக்கு இறையாக ஒரு நாள் நான் போடுறேன் பாரு/

அந்த மீன நான் சாப்பிட்டுட்டேன் நா.!

செல்வா said...

// # கவிதை வீதி # சௌந்தர் said...
யூவர் அன்டர் அரஸ்ட்...
//

இப்பவே அர்ரஸ்ட்டா நா ?

அருண் பிரசாத் said...

தம்பி ... உனக்கு நீச்சல் தெரியுமா?

தெரியாதுனா உன்னையும் தண்ணில தள்ளிவிடனும்

செல்வா said...

// அருண் பிரசாத் said...
தம்பி ... உனக்கு நீச்சல் தெரியுமா?

தெரியாதுனா உன்னையும் தண்ணில தள்ளிவிடனும்
//

தண்ணில விழுந்திட்டா எனக்கு நீச்சல் மறந்திடும் நா!

உணவு உலகம் said...

பாவங்க உங்க அம்மா.

Niroo said...

heheh :)

Anonymous said...

(சுறா வடிவேல் ஸ்டைல்:)ஒரு மீனுக்காக ஜெயிலுக்கு போக நெனக்குற உங்கள பத்தி நெனைக்கும்போது, ...........ஆஆனந்த கண்ணீர் ஆஆஆவுவுவு

ஷர்புதீன் said...

ஹ ஹ ஹா

Ruban said...

//" நேத்திக்கு அப்பா ஒரு மீன் வாங்கிட்டு வந்தார்ல... //

என்ன மீன் ?
ஜாமீன் ?

யாழ்ப்பாணம்

முத்தரசு said...

யோவ் அது என்ன ஜாமீனா?

முத்தரசு said...

நீர், தள்ளிவிட்டது எந்த ஜாதி மீனு?