Saturday, July 2, 2011

இலவச நிமிடங்கள்!


செல்வா புதிதாக போஸ்ட் பெய்ட் செல்போன் இணைப்பொன்று வாங்கியிருந்தார்.

செல்வா அவ்வளவு எளிதாக எந்த செலவும் செய்துவிடமாட்டார். அப்படியே செலவு செய்தாலும் ஏதேனும் இலவசமாகக் கிடைக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்.

அவரின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த செல்போன் இணைப்பு அமைந்திருந்தது. 

ஒரு மாதத்திற்கு 1440 நிமிடங்கள் இலவசம் என்ற அவர்களின் திட்டம் செல்வாவை வெகுவாகக் கவர்ந்ததால் உடனடியாக அந்த நிறுவனத்தில் புதிய இணைப்பொன்றை வாங்கினார்.

இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. செல்வாவின் மனதில் குடியேறியிருந்த சந்தேகம் வலுவடையத் தொடங்கியது.

இனியும் தாமதித்தால் தான் ஏமாற்றப்படுவோமோ என்ற பயத்தில் தனது நண்பனை அழைத்து " மச்சி ஒரு மாசத்துக்கு எத்தன நாளு ?" என்று கேட்டார்.

" நாலாம் தேதி ஒரு நாலு வரும் , அப்புறம் பதினாலாம் தேதி ஒரு நாலு வரும், அப்புறம் இருபத்தினாலம் தேதி ஒன்னு ஆக மொத்தம் ஒரு மாசத்துக்கு மூணு நாலு! " என்று சொன்னார் அவரது நண்பர்.

எரிச்சலடைந்த செல்வா " ஐயோ நான் கேட்டது நாள் (DAY ) , நம்பர் இல்ல! " என்றார்.

" அது மாசத்தப் பொறுத்து வரும்! " 

" சரி இந்த மாசத்துக்கு எத்தன நாளு ? "

" இது ஜூலை மாசம் , இந்த மாசத்துக்கு 31 நாள் வரும்! " என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார் அந்த நண்பர்.

உடனடியாக அந்த செல்போன் கம்பனிக்கு அழைத்த செல்வா " மேடம் இந்த மாசத்துக்கு எத்தன நாள் ? " என்றார்.

" உங்களுக்கான டீடைல் தான் செக் பண்ணிட்டு இருக்கேன் சார் , உங்க பேர் சொல்லுங்க! " என்றார்.

" இந்த மாசத்துக்கு எத்தன நாளுன்னு கேட்டா கூட செக் பண்ணி சொல்லுறேன்னு சொல்லுறாங்க, கொடுமைடா!" என்று மனதில் நினைத்துகொண்டு தனது பெயரைக் கூறினார்.

" சார் இந்த மாசத்துக்கு எத்தன நாள் நீங்க பேசிருக்கீங்கனு தகவல் வேணுமா?" என்றார் அந்த அதிகாரி.

" அதில்லைங்க , இந்த மாசம் ஜூலைக்கு மொத்தம் எத்தன நாள் ? " என்று தெளிவாகக் கேட்டார் செல்வா.

" இந்த டீடைல் இங்க கிடைக்காது சார் , இருந்தாலும் சொல்லுறேன் 31 நாள்! " என்றார்.

செல்வாவிற்கு தூக்கிவாரிப்போட்டது, மேலும் தான் ஏமாந்து விட்டதாக நினைத்தார். உடனடியாக அந்த அதிகாரியிடம் " அப்படின்னா எனக்கு தரவேண்டிய அந்த ஒருநாள எப்படி தருவீங்க ? " என்றார்.

" உங்களுக்குத் தரவேண்டிய ஒருநாளா? என்ன சொல்லுறீங்க ?" என்றார் அந்த அதிகாரி.

" கனெக்சன் தரும்போது அவ்ளோ அருமையா பேசுறீங்க, இப்ப மட்டும் மறந்திருவீங்களா ? என்னோட பிளான் படி எனக்கு 1440 நிமிஷம் இலவசம்னு சொன்னீங்கள்ல, 1440 நிமிசம்னா ஒரு நாள் , அந்த நாள எனக்கு எப்படி தரப்போறீங்க? அப்புறம் இலவசமா தர்ற நாளுக்கு(கிழமை) என்ன பேரு வைக்கப் போறீங்க ? அப்படின்னா என்னோட மாசத்துக்கு 32 நாள் வரணும்ல?" என்றார்.

செல்வாவின் இந்தக் கேள்வியால் கதிகலங்கிப்போன அந்த அதிகாரி உடனடியாக இணைப்பைத் துண்டித்தார்!

17 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த நாளுக்கு என் பேர் வெக்க சொல்லு... பொறிகடல வாங்கித்தாரேன்....

செல்வா said...

@ ராம்ஸ் :

எனக்கு கடல மிட்டா பிடிக்காது னா :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
@ ராம்ஸ் :

எனக்கு கடல மிட்டா பிடிக்காது னா :-)
///////

டெய்லி சாப்புட்டு சாப்புட்டு அதானே திங்கிறே?

செல்வா said...

@ ராம்ஸ் :

அன்னிக்கு ஒரு தடவ மட்டும் தான் தின்னேன் னா :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ராஸ்கல் போஸ்ட் paid சிம் வேணும்ன்னு போஸ்ட் ஆபீஸ்ல போய் கேட்ட பயதானடா நீ!!!

செல்வா said...

//ராஸ்கல் போஸ்ட் paid சிம் வேணும்ன்னு போஸ்ட் ஆபீஸ்ல போய் கேட்ட பயதானடா நீ!!! //

அது உங்கலுக்கும் தெரிஞ்சு போச்சா?

தமிழ்மணி said...

போஸ்ட் paid சிம் அப்பிடின போஸ்ட்ல pay பண்றதா? அப்பிடின ஸ்டாம்ப் ஓட்டனுமா?

செல்வா said...

//போஸ்ட் paid சிம் அப்பிடின போஸ்ட்ல pay பண்றதா? அப்பிடின ஸ்டாம்ப் ஓட்டனுமா?//

அது அவுங்க ஒட்டிக்குவாங்க னா :-)

கடம்பவன குயில் said...

ஓ...உங்க அறிவப்பார்த்து மிரண்டுதான் அந்த செல்போன் கம்பெனிகாரனே இழுத்துமுடிட்டு ஓடிட்டானா?

கலக்குங்க கலக்குங்க.

கடம்பவன குயில் said...

ஓ...உங்க அறிவப்பார்த்து மிரண்டுதான் அந்த செல்போன் கம்பெனிகாரனே இழுத்துமுடிட்டு ஓடிட்டானா?

கலக்குங்க கலக்குங்க.

செல்வா said...

//ஓ...உங்க அறிவப்பார்த்து மிரண்டுதான் அந்த செல்போன் கம்பெனிகாரனே இழுத்துமுடிட்டு ஓடிட்டானா?

கலக்குங்க கலக்குங்க.
//

ஹி ஹி ஹி :-) நன்றிங்க :-)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கலக்கல்...

உணவு உலகம் said...

கல கல காமெடி.

Mohamed Faaique said...

செள்வா ஏரியால உள்ள டெலிபோன் டவருக்கெல்லாம் பாம்ப் (Bomb)வைங்கடா.......

Madhavan Srinivasagopalan said...

// " நாலாம் தேதி ஒரு நாலு வரும் , அப்புறம் பதினாலாம் தேதி ஒரு நாலு வரும், அப்புறம் இருபத்தினாலம் தேதி ஒன்னு ஆக மொத்தம் ஒரு மாசத்துக்கு மூணு நாலு! " என்று சொன்னார் அவரது நண்பர். //

உங்க பிரண்டு.. வேற எப்படி இருப்பாரு..
எல்லாம் பழக்க தொதம்தான் (அவருக்கு)

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

ஹாய் நண்பா
உங்கள் செல்வா கதைகள்
புக்கா எப்போ போட போறீங்க ???
--- யானை குட்டி---
-(மக்கா நாங்க மட்டுமா கஷ்ட படனும் ?)

Unknown said...

சூப்பரு செல்வா